மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைச் செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு: புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். அரசியல்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். மாணவர்கள் ஆசிரியர் சொல்படி பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலைப் பளு குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
***************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் இருந்த சங்கடம் அகலும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
***************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரக அமைப்பு உள்ளது.
2ம் தேதி வெள்ளிக்கிழமை - புத பகவான் - சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.

தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன்
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்