மகம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; தொழிலில் திருப்தி; பொறுப்பு கூடும்; குடும்பக் கவலை; திடீர்  திருப்பம்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகம்:

குரு பகவான் உங்களின் பனிரெண்டாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சொல்லாற்றல், செயலாற்றல் இரண்டும் ஒருங்கே பெற்ற மகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த குருப்பெயர்ச்சியில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

எந்தவொரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன் தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்பக் கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சைக் கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தனப்போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.

மாணவர்களுக்கு, முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது.

பரிகாரம்: பைரவர் வழிபாடு குடும்ப பிரச்சினைகளைத் தீர்க்கும். எதிர்ப்புகள் விலகும்.

மதிப்பெண்கள்: 61% நல்ல பலன்கள் ஏற்படும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்