குருப் பெயர்ச்சி பலன்கள் - எந்த ராசிக்காரர்களுக்கு டாப்? ஓரளவு சுமார் யாருக்கெல்லாம்? பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள்?

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் குரு பகவான். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் குரு பகவான். சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவரே குரு பகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு.

நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

குரு பகவான் மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் கொண்டவராகத் திகழ்கிறார். ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்தத் துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள்... உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருவின் பலம்:
குரு எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும் விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைககள்.

நிகழும் மங்கலகரமான கலியுகாதி 5121- சாலிவாகன சகாப்தம் 1942 - பசலி 1430- கொல்லம் 1196ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது சரத் ருது ஐப்பசி மாதம் 30ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 15.11.2020 சுக்லபக்ஷ ப்ரதமையும் - ஞாயிற்றுக்கிழமையும் - அனுஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - கிம்ஸ்துக்ணம் கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 39.01க்கு - இரவு 09.48க்கு மிதுன லக்னத்தில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசிக்கு வரும் குரு பகவான் கும்ப ராசிக்கு பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமையன்று மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் மகர ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட, பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - கன்னி

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: துலாம் - தனுசு - மகரம் - மீனம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - சிம்மம் - விருச்சிகம் - கும்பம்

********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

சுற்றுச்சூழல்

16 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

32 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்