மிதுன ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; எதிர்பார்த்த லாபம்; மதிப்பு கூடும்; அதிக உழைப்பு; எச்சரிக்கை தேவை! 

By செய்திப்பிரிவு


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தோல்வியை வெற்றிப் படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே.

இந்த மாதம் வீண் மனக்கவலை அகலும். கனவுத் தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.

கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
மாணவர்களுக்கு பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயணத்தில் லாபமும் நிம்மதியும் உண்டு. புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.

திருவாதிரை:
இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.எதிலும் எச்சரிக்கை தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து வணங்கி வாருங்கள். முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்