இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: முக்கிய அலுவல்களை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்த சிலரை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்கள், உறவினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கன்னி: குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

துலாம்: சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வந்து போகும். முக்கியப் பிரமுகர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகப் பயணம் ஏற்படக் கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்