இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். பழைய பிரச்சினைகள் தூக்கத்தைக் கெடுக்கும்.

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

துலாம்: நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

மகரம்: உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பங்கு வர்த்தகம் லாபம் தரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

வாழ்வியல்

5 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்