இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் காணப்படும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் திறமை பளிச்சிடும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.

கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் முன்கோபம் தலைதூக்கும்.

துலாம்: சத்தமே இல்லாமல் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும்.

விருச்சிகம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்..

தனுசு: அதிரடியாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

மீனம்: வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்