இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராது மனத்தாங்கல் வரும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பால்ய நண்பருடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். திடீர் பயணம் ஏற்படலாம்.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். பூர்விக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும்.

விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.

மகரம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்