இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: அழகு, இளமைக் கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மிதுனம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் மீண்டும் வலிய வந்து பேசுவார்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும்.

கன்னி: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். கலைப் பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அணுகூலம் உண்டாகும்.

மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியங்களை திறம்பட முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

11 mins ago

கல்வி

6 mins ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

44 mins ago

தமிழகம்

21 mins ago

தொழில்நுட்பம்

27 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்