இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுபநிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபரிடம் சொல்லி கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கடகம்: மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சிலர் பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும்.

சிம்மம்: எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: தொட்ட காரியங்கள் துலங்கும். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும். முக்கிய பிரமுகர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், பணி நிமித்தமாக தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். புது வாகனம், மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை அவ்வப்போது தலைகாட்டும். யாரை நம்புவது என்பதில் குழப்பம் வரும். பணம் மற்றும் காசோலை சம்பந்தப்பட்டவைகளில் கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள்.

கும்பம்: வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். எந்தக் காரியத்தை தொட்டாலும் இழுபறியில் முடியும். முக்கிய வேலைகளை நேரடியாக நீங்களே செய்வது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான செய்தி வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

1 min ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்