இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். துடிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனதில் நிலவிய குழப்பம் விலகி தெளிவு ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் திடீர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படக் கூடும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லுங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவரை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசி்ப்பீர்கள்.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.

மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 secs ago

இந்தியா

5 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்