இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மளமளவென்று முடியும்.

ரிஷபம்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளை கள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். விருந்தினர் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. நண்பர்கள் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

தனுசு: விலகியிருந்த பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் தக்கசமயத்தில் உதவுவார்.

மகரம்: உங்களின் நீண்டகாலக் கனவு நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்து மோதல்கள் வரக்கூடும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மீனம்: சவால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த வர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்