Published on : 11 Feb 2025 18:15 pm
தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. | படங்கள்: லென்ஸ் சீனு
பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்டனர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.
இரவு வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் வடபழனியில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.