Published on : 20 Apr 2024 18:18 pm

‘இளவரசர் தோற்பார்’, ‘ஊழல் ஸ்கூல்’... - மோடி Vs ராகுல் வார்த்தைப் போர்!

Published on : 20 Apr 2024 18:18 pm

1 / 12
“அமேதியில் தோற்றது போலவே இந்தத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டிலும் காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) தோல்வியைத் தழுவுவார்.” - நரேந்திர மோடி
2 / 12
“நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள்.” - ராகுல் காந்தி
3 / 12
“சமூக நீதி என்ற பெயரில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்தன.” - நரேந்திர மோடி
4 / 12
“இன்று இந்தியாவில் 70 கோடி மக்களின் சொத்து 22 பெரிய தொழிலதிபர்களிடம் உள்ளது. இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்?” - ராகுல் காந்தி
5 / 12
“முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தீமைகளை சரிசெய்ய 10 வருடங்கள் ஆனது. அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது.” - நரேந்திர மோடி
6 / 12
“மக்களின் சக்தியை பாஜக வீணடிக்கிறது. நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது. இது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது.” - ராகுல் காந்தி
7 / 12
“இண்டியா கூட்டணி கட்சியினர் 25% தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். ஜூன் 4-க்குப் பிறகு இன்னும் அதிகமாக தங்களுக்குள் மோதிக்கொள்வர்” - நரேந்திர மோடி
8 / 12
“இது சாதாரண தேர்தல் அல்ல. நமது நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்.” - ராகுல் காந்தி
9 / 12
“இந்து மதத்துக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் (ராகுல், அகிலேஷ்) விட்டுவிடவில்லை. இரு இளவரசர்கள் படத்தை மக்கள் ஏபுறக்கணித்து விட்டனர்” - நரேந்திர மோடி
10 / 12
“நாட்டின் பன்முகத்தன்மையை மாற்ற முயற்சித்து பாஜக நேரத்தை வீணடிக்கிறது. பன்முகத்தன்மையை ஒருபோதும் மாற்ற முடியாது.” - ராகுல் காந்தி
11 / 12
“எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைவரும் தங்களின் ஊழல்களை மறைப்பதற்காகவே சுயநலத்தோடு ஒன்றிணைந்துள்ளனர்.” - நரேந்திர மோடி
12 / 12
“ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார். ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி உள்ளிட்ட பாடங்களை அவர் நடத்துகிறார்” - ராகுல் காந்தி

Recently Added

More From This Category

x