Published on : 12 Apr 2024 19:08 pm

மோடி சவால் முதல் கார்த்திக் கருத்து வரை | மைக் டெஸ்டிங்

Published on : 12 Apr 2024 19:08 pm

1 / 16
“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என சொல்ல காங்கிரஸ் தயாரா?” - நரேந்திர மோடி
2 / 16
“தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும், தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.” - ராகுல் காந்தி
3 / 16
“போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கிறது முதல்வரின் குடும்பம்.” - நிர்மலா சீதாராமன்
4 / 16
“பாஜக தற்போது பீதியில் இருக்கிறது. 2004 மக்களவைத் தேர்தலில் என்ன முடிவு கிடைத்ததோ, அதேபோன்ற ஒரு முடிவுதான் இந்த தேர்தலிலும் அக்கட்சிக்குக் கிடைக்கும்.” - சசி தரூர்
5 / 16
“மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது.” - திருமாவளவன்
6 / 16
“தெற்கு தேயவில்லை, தேய்க்கப் பார்க்கிறீர்கள். மக்களை பிளவுபடுத்தப் பார்க்கிறீர்கள். பிளவுபடுத்த நினைத்தால் தமிழகம் பிளவுபடாது.” - கமல்ஹாசன்
7 / 16
“பாஜக உள்ளே வந்து விடக் கூடாது என்ற கொள்கையில் அதிமுக, திமுக ஒன்றாகிவிட்டன.” - அர்ஜுன் சம்பத்
8 / 16
“திமுக என்றாலே வாக்குறுதி மன்னர்கள். கருணாநிதி, ஸ்டாலினை தொடர்ந்து, உதயநிதியும் வாக்குறுதி அளிப்பதோடு சரி, அதை நிறைவேற்றுவது இல்லை.” - அன்புமணி ராமதாஸ்
9 / 16
“தேர்தல் முடிவுகளால் மோடி கை இறங்கியிருக்கும். முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே நாட்டின் பிரதமராக ஆவார்.” - திருச்சி சிவா
10 / 16
“ஒரு தலைமுறைக்கே கல்வியை இல்லாமல் செய்ய முயலுகிறார்கள். பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.” - கனிமொழி
11 / 16
“இந்தியாவை காப்பாற்றப் போவதாக ஸ்டாலின் சொல்கிறார். முதலில் தமிழகத்தை காப்பாற்றுங்கள், பின்னர் இந்தியாவை காப்பாற்றலாம்.” - பிரேமலதா
12 / 16
“திருமணம் ஆனதும் தேனிலவுக்காக பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு செல்வர். ஆனால், ஸ்டாலின் திருமணம் ஆனதும் மிசா வாங்கி சிறைக்கு சென்றவர்.” - நாஞ்சில் சம்பத்
13 / 16
“மாமன்னன் படம் போல வடக்கில் உள்ளவர்கள் கெட்டவர்கள், தெற்கில் உள்ளவர்கள் நல்லவர்கள் என தவறாக பரப்பினால் அதை கேட்க வேண்டிய நேரம் இதுதான்.” - அண்ணாமலை
14 / 16
“விஜய பிரபாகரன் எனது மூத்த சகோதரர் மகன். அவர் வரட்டும். ராதிகா எனக்கு தெரிந்தவர். அவரும் வரட்டும். யார் வரணும்னு மக்களே முடிவு செய்வர்.” - கார்த்திக்
15 / 16
“மத்திய அரசிடம், நமது மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பழனிசாமி துரோகம் செய்து விட்டார். மாநில உரிமையைக் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.” - உதயநிதி
16 / 16
“தமிழகத்தின் திராவிட மாடலின் தொடர்ச்சியாக இந்த நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர் ராகுல் காந்திதான்.” - கனிமொழி

Recently Added

More From This Category

x