Published on : 24 May 2023 12:46 pm
சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை கொண்டார்.
Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா உடனான சந்திப்பில் தமிழகத்தில் புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவ கேட்டுக் கொண்டார்.
செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் உடனான சந்திப்பின் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழக அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா உடனான சந்திப்பின்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) கட்டமைப்புகளை உருவாக்குவதில் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.