Published on : 25 Jan 2021 17:51 pm

பேசும் படங்கள்... (25.01.2021)

Published on : 25 Jan 2021 17:51 pm

1 / 56

முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் முன்பாக... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ’திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என உறுதி அளிக்கிறேன்’ என்ற திட்டத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று (25.1.2021) அறிவித்தார். உடன் - துரைமுருகன். படங்கள்: ம.பிரபு

2 / 56
3 / 56

நீலகிரியில் தீயிற்கு இரையான யானையை நினைவுகூர்ந்து... குரோம்பேட்டை குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நேற்று (24.1.2021) மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.முத்துகணேஷ்

4 / 56

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை - ஆர்.கே. நகர் ஐஓசி நேதாஜி நகரில்... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நேற்று (24.1.2021) இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. படம்: பு.க.பிரவீன்

5 / 56
6 / 56
7 / 56
8 / 56

தைபூசத்தையொட்டி நடைபெறவுள்ள தெப்பத் திருவிழாவை முன்னிட்டு... சென்னை - மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் தற்போது (24.1.2021) தெப்பம் தயாராகி வருகிறது. படங்கள்: பு.க.பிரவீன்

9 / 56
10 / 56

குடியரசு தின விழாவையொட்டி... சென்னை- கடற்கரை காமராஜர் சாலையில் பல்வேறு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (24.1.2021) நடைபெற்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்

11 / 56
12 / 56
13 / 56
14 / 56
15 / 56
16 / 56
17 / 56
18 / 56
19 / 56
20 / 56
21 / 56
22 / 56
23 / 56
24 / 56
25 / 56
26 / 56
27 / 56
28 / 56
29 / 56

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி.. கோவை மாவட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்கு நேற்று (24.1.2021) வந்திருந்தார். அவர் - நேற்று கோவை பீளமேடு ரொட்டிக் கடை மைதானம், கோவை புலியகுளம் விநாயகர் கோவில் சந்திப்பு மற்றும் கோவை காலப்பட்டி சந்திப்புப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். படங்கள்: ஜெ.மனோகரன்

30 / 56
31 / 56
32 / 56
33 / 56

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி.. கோவை மாவட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்கு நேற்று (24.1.2021) வந்திருந்தார். முதல்வரை வரவேற்று சாலையெங்கும் நடப்பட்டிருந்த கரும்புகளை... முதல்வர் பேசிச் சென்ற பின்பு... அங்கு கூடியிருந்த பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர் படங்கள்: ஜெ.மனோகரன்

34 / 56
35 / 56
36 / 56
37 / 56

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி.. கோவை மாவட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்கு நேற்று (24.1.2021) வந்திருந்தார். பிரச்சாரத்துக்கு இடையில் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் நேற்று முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். படம்: ஜெ மனோகரன்

38 / 56

சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் பன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில் ’சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரை தூக்கிலிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (24.1.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்

39 / 56

தாம்பரம் அருகே சரக்கு லாரியில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருட்களை பீர்க்கங்கரணை போலீஸார் கைப்பற்றி... தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தியது தொடர்பாக சிலரை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர். படம்: எம்.முத்துகணேஷ்

40 / 56

சிட்லபாக்கம் பகுதியில் 3,500 புதிய குடிநீர் இணைப்புகளை... இன்று (25.1.2021) அமைச்சர்பாண்டியராஜன் பயனாளிகளிடம் வழங்கினார். அருகில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

41 / 56
42 / 56

புதுச்சேரி மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் , தீப்பாய்ந்தான் தொகுதி எம்எல்ஏ ஆகியோர் தனது எம்எல்ஏ பதவியின் ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி- சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் இன்று (25.1.2021) வழங்கினர். படம்: எம்.சாம்ராஜ்

43 / 56

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் ரமேஷ்... இன்று (24.1.2021) காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். படம்: எம்.சாம்ராஜ்.

44 / 56

புதுச்சேரி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு... இன்று (25,1.2021) தேர்தல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட முதல் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டும் மாணவிகள். படம்: எம்.சாம்ராஜ்

45 / 56

சென்னையில் இன்று (25.1.2021) நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின விழாவில் உறுதிமொழி ஏற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் - சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, தலைமைத் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு, சென்னை மாநகர ஆணையர் கோ.பிரகாஷ். படம்: க.ஸ்ரீபரத்

46 / 56

சென்னையில்இன்று (25.1.2021) நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேர்தல் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். படம்: க.ஸ்ரீபரத்

47 / 56

இன்னும் சில தினங்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளதையொட்டி... சென்னை - வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை அமைக்கும் பணி தற்போது (25.1.2021) நடைபெற்று வருகிறது. பணியை தொடங்கும் முன்பு பூஜை செய்யும் ஊழியர்கள். படம்: க.ஸ்ரீபரத்

48 / 56
49 / 56
50 / 56

நாளை நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் இன்று (25.1.2021)நடைபெற்றது . இந்நிலையில் - பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

51 / 56
52 / 56
53 / 56
54 / 56

தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்... அடையாறு - இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையக் கட்டிடத்தில் தற்போது (25.1.2021) ஓவியம் வரையப்பட்டு வருகிறது. படங்கள்: பு.க.பிரவீன்

55 / 56
56 / 56

Recently Added

More From This Category

x