Published on : 19 Nov 2020 21:25 pm

பேசும் படங்கள்... (19.11.2020)

Published on : 19 Nov 2020 21:25 pm

1 / 53

5 ஆண்டு மருத்துவப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்) கலந்தாய்வு நேற்று தொடங்கியதையடுத்து... சென்னை மருத்துவக் கல்லூரில் இன்று (19,11,2020) மாணவர் சேர்க்கை தொடங்கியது. படம்: பு.க.பிரவீன்

2 / 53
3 / 53
4 / 53

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - தொடர் மழை காரணமாக மதுரை - பெரியார் பேருந்து நிலையம் மழைநீர் சூழ்ந்து இன்று (19.11.2020) கடல் போல் காட்சியளித்தது. படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

5 / 53
6 / 53
7 / 53

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக தேர்தல் முகவர்கள் கூட்டம் தாம்பரத்தில் இன்று (19.11.2020) நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு பேசினார். அருகில் - அதிமுக மாவட்டச் செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர். படம்: எம்.முத்துகணேஷ்

8 / 53

சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தில் இன்று (19.11.2020) அந்தி மாலை நேரத்தில் கார்மேகங்கள் சூழ்ந்த வானம் ரம்மியமாக காட்சியளித்தது.. படங்கள்: பு.க.பிரவீன்

9 / 53
10 / 53
11 / 53

சென்னை - மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் ரோட்டரி சங்கம் (கிழக்கு) மற்றும் க்ரீன் கலாம் அமைப்புகள் இணைந்து இன்று மரம் நடும் விழா நிகழ்ச்சியினை நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். இன்று நடிகர் விவேக்கின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: பு.க.பிரவீன்

12 / 53
13 / 53
14 / 53

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தென் சென்னை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று (19.11.2020) சென்னை - கே.கே. நகர் பகுதியில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: பு.க.பிரவீன்

15 / 53

சென்னை - கோயம்பேடு மார்கெட்டில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத நிலையில்... இன்று (19.11.2020) கொத்துமல்லி மற்றும் புதினா கட்டுகள் வீணாகிக் கிடந்தன. படங்கள் : பு.க.பிரவீன்

16 / 53
17 / 53

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்த நாளையொட்டி இன்று (19.11.2020) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சி மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். படம்: ஜெ.மனோகரன்

18 / 53

வரும் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி... கோவை சங்கனூர் பகுதியில் கல்லால் ஆன அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக தொழிலாளர்கள் தற்போது (19.11.2020) ஈடுபட்டு வருகின்றனர். படங்கள்: ஜெ.மனோகரன் .

19 / 53
20 / 53
21 / 53
22 / 53
23 / 53
24 / 53
25 / 53

சென்னை - பல்லாவரம் ரேடியல் சாலையையொட்டியுள்ள... நெமிலிச்சேரி ஏரியில் மழை நீரும் இப்பகுதி கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. சமீபத்தில் தூர்வாரி சீர்செய்யப்பட்ட இந்த ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருந்தால்... இப்பகுதியின் நிலத்தடி நீர் இன்னும் வளமாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

26 / 53
27 / 53

சென்னை - புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் பெரிய ஏரியான மணிமங்கலம் ஏரி... சமீபத்தில் பெய்த மழை காரணமாக கடல் போல் காட்சியளிக்கிறது. படங்கள் :எம்.முத்து கணேஷ்

28 / 53
29 / 53
30 / 53
31 / 53

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்‌பி இன்று (19.11.2020) மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. .உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் நாசே.ராமசந்திரன் மற்றும் கட்சியினர் உள்ளனர் படங்கள்: க.ஸ்ரீபரத்

32 / 53
33 / 53
34 / 53
35 / 53

சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (19.11.2020) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். படம் : க.ஸ்ரீபரத்

36 / 53

சென்னை - எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டரங்கில் இன்று (19.11.2020) நடைபெற்ற தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு... அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். படம்: க.ஸ்ரீபரத்

37 / 53
38 / 53
39 / 53
40 / 53

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கவும், பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் திருவானைக்காவல் டிரங் ரோடு முதல் கொண்டையம் பேட்டை சென்னை - மதுரை நெடுஞ்சாலை சந்திப்பு வரை இன்று (19.11.2020) திருச்சி - மாநகர போலீஸார் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.

41 / 53
42 / 53
43 / 53
44 / 53

ஸ்ரீரங்கம் - ரெங்கநாதர் கோயிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக ஆயிரங்கால் மண்டபம் முன்பு பந்தல் அமைக்கும் பணி தற்போது (19.11.2020) மும்முரமாக நடைபெற்று வருகிறது. படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

45 / 53
46 / 53
47 / 53
48 / 53
49 / 53
50 / 53

சேலம் மாவட்டம், நங்கவள்ளி பெரியசோகை சென்றாயப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா இன்று (19.11.2020) நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி அவரது மனைவி ராதாவுடன் பங்கேற்றார். உடன் - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஆட்சியர் ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர் . படங்கள் : எஸ்.குருபிரசாத்

51 / 53
52 / 53
53 / 53

Recently Added

More From This Category

x