Published on : 11 Nov 2020 21:36 pm

பேசும் படங்கள்... (11.11.2020)

Published on : 11 Nov 2020 21:36 pm

1 / 71

தீபாவளிப் பண்டிகையையொட்டி... நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்.... திருச்சி - மன்னார்புரம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மார்க்கமாகச் செல்லும் பேருந்து இயக்கத்தை... துணை ஆணையர் வேதரத்தினம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர் ராஜ்மோகன் ஆகியோர் இன்று (11.11.2020) கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

2 / 71
3 / 71

சென்னை - வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியையோட்டிய பகுதியில் இட ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளதைக் கண்டித்தும்... ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும்.... அந்தப் பள்ளி வாயிலில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகம் வரையில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மக்கள் சந்திப்பு ஆர்ப்பாட்டம் இன்று (11.11.2020) காலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். படங்கள்: ம.பிரபு

4 / 71
5 / 71
6 / 71

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதையொட்டி... கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும்... ஆங்காங்கே புதிதாக 147 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் - பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சிறப்பு கவுன்டர்கள், உதவி மையம், பயணிகள் வசதிக்காக சிறப்பு தற்காலிக நடைமேடைகள், இருக்கைகள் மற்றும் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. படங்கள்: ம.பிரபு

7 / 71
8 / 71
9 / 71
10 / 71
11 / 71
12 / 71

சென்னை - பாடி மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இன்று (11.11.2020) காலையில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு காரணமாக நீண்ட தொலைவு வரை வரிசைக்கட்டி வாகனங்கள் நின்றன. படங்கள்: ம.பிரபு

13 / 71
14 / 71
15 / 71

சென்னை - கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் கரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் - திபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் அதிகளவில் பயணிகள் வருகையை எதிர்பார்த்து... கார்த்திருக்கும் தனியார் பேருந்துகள். படங்கள்: ம.பிரபு

16 / 71
17 / 71
18 / 71

சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வரும் சூழலில்... இன்று (11.11.2020) நண்பகல்பொழுதில் கூட அண்ணா நகர் மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. படங்கள் : ம.பிரபு

19 / 71
20 / 71

முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் 103- வது பிறந்த நாளையொட்டி... சென்னை - சத்தியமூர்த்தி பவனில் இன்று (11.11.2020) அவரது திருவுருவப்படத்துக்கு பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில்... நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் - பொருளாளர் நாசே.ராமசந்திரன், செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர். படங்கள்: க.ஸ்ரீபரத்

21 / 71
22 / 71
23 / 71

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நாளைமுதல் கடை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்... தீபாவளி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... கோயம்பேடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில்... தமிழக முதல்வர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலருக்கு இ-போஸ்ட் அனுப்பும் போராட்டம் சென்னை - அண்ணா சாலை தலைமை நிலையம் முன்பு இன்று (11.11.2020) நடைபெற்றது. படம் : க.ஸ்ரீபரத்

24 / 71

தமிழ்நாடு கனிம வள நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... கனிம வள (டாமின்) நிறுவனத்தின் அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்... அந்த அலுவலகத்தின் முன்பு இன்று (11.11.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்

25 / 71

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்... சென்னை - தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி... பட்டாசுக் கடைகளில் அவசர காலத்தில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள மணல்வாளி. தீயணைப்பான் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து... அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் இன்று (11.11.2020) பட்டாசுக் கடைகாரர்களிடம் விளக்கினர். படங்கள்: க.ஸ்ரீபரத்

26 / 71
27 / 71
28 / 71
29 / 71
30 / 71
31 / 71

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில்... பல்வேறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கல் இயக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் - தாம்பரம் - சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளுக்கும்... தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம், திருவண்ணாமலை, திண்டிவனம் பகுதிகளுக்கும் இன்று (11.11.2020) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. படங்கள்: எம்.முத்துகணேஷ்

32 / 71
33 / 71
34 / 71
35 / 71

தாம்பரம் பாலத்தில் தாம்பரம் நகராட்சி சார்பில்... கரோனா விழிப்புணர்வு சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்ததை அழித்துவிட்டு... தற்போது (11.11.2020) அதிமுகவினர் தங்கள் கட்சி விளம்பரங்களை இந்தச் சுவரில் தீட்டி வருகின்றனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

36 / 71
37 / 71

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும்... பயணிகள் கூட்டத்தாலும்... தாம்பரம் ரயில் நிலையப் பகுதியில் பேருந்துகள் தாறுமாறாக இன்று (11.11.2020) நிறுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக - ஜிஎஸ்டி சாலையில் நெடுந்தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீஸார் பெரிதும் திணறினர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

38 / 71
39 / 71
40 / 71
41 / 71
42 / 71

சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓமந்தூர் அரசினர் தோட்டம் அருகே மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதையில் இன்று (11.11.2020) மழைநீர் தேங்கியதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். படங்கள் : பு.க.பிரவீன்

43 / 71
44 / 71
45 / 71
46 / 71

ரயிலில் எளிதில் தீ பற்றக் கூடியப் பொருட்களையோ, பட்டாசுகளையோ பயணிகள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது குறித்து... சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார்.. பயணிகளிடையே இன்று (11.11.2020) விழிப்புணர்வு ஏற்படுத்தினர். படங்கள்: பு.க.பிரவீன்

47 / 71
48 / 71
49 / 71
50 / 71
51 / 71

நெருக்கமான வீடுகள், கடைகள், குடியிருப்புகள் உள்ள இடங்களில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் விபத்து இன்றி பொதுமக்கள் கொண்டாட அறிவுறுத்தி... தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்... வடசென்னை - ராயபுரம் நிலையம் சார்பில் இன்று (11.11.2020) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்

52 / 71
53 / 71
54 / 71
55 / 71

சென்னை நகரத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆழ்வார்ப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் இன்று (11.11.2020) பெய்த மழையின்போது சாலைகளில் மழையில் நனைந்தபடியே வாகனங்கள் சென்றன. படங்கள்: பு.க.பிரவீன்

56 / 71
57 / 71
58 / 71
59 / 71
60 / 71
61 / 71
62 / 71

கரோனா தொற்று தடுப்புக்காக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த சென்னை - வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (11.11.2020) மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று குறைவான எண்ணிக்கையில்தான் பார்வையாளர்கள் வந்திருந்தனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

63 / 71
64 / 71
65 / 71
66 / 71
67 / 71
68 / 71

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கு தொடர்புடைய... அக்காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறையினர் 9 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (11.11.2020) ஆஜர்படுத்தப்பட்டனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

69 / 71

தாம்பரம் - சண்முகம் சாலையில் பொதுமக்களிடையே ... தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட அறிவுறுத்தி... தாம்பரம் தீயணைப்புத் துறை அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான துண்டுப் பிரசுரங்களை இன்று (11.11.2020) வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

70 / 71
71 / 71

Recently Added

More From This Category

x