Published on : 21 Sep 2020 21:03 pm

பேசும் படங்கள்... (21.09.2020)

Published on : 21 Sep 2020 21:03 pm

1 / 35

சென்னை - தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நடமாடும் ரேஷன் வாகன செயல்பாடுகளை இன்று (21.9.2020) தொடங்கி வைத்தார். மேலும் - மின்சாரத்திலும் மற்றும் சூரிய ஒளியிலும் இயங்கும் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். உடன் - துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள். படங்கள் : க.ஸ்ரீபரத்

2 / 35
3 / 35
4 / 35
5 / 35
6 / 35
7 / 35

மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவை கண்டித்து... சென்னை பாரிமுனையில் இன்று (21.9.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறறது. படங்கள் : க.ஸ்ரீபரத்

8 / 35
9 / 35
10 / 35
11 / 35
12 / 35
13 / 35
14 / 35

திருச்சி - ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பாலத்தின் சாலையை சீரமைக்கக் கோரி, சாக்கு போட்டி நடத்தும் போராட்டத்தில் இன்று (21.9.2020) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்

15 / 35

திருச்சி - ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பாலத்தின் சாலை வெகுநாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்கக் கோரி... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்

16 / 35

திருச்சி - ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீடு வீடாகக் கொண்டுசென்று எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகிப்போர் தொழிற் சங்கத்தினர் இன்று (21.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்

17 / 35

500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த... வில்லிவாக்கம் - தாமோதரப் பெருமாள் கோயில் குளத்தை. பல ஆண்டுகளுக்குக் பிறகு தூர்வாரி புதுப்பிக்கும் பணி தற்போது (21.9.2020) தொடங்கியுள்ளது. படம் : ம.பிரபு

18 / 35

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் இன்று (21.9.2020) தொடங்கியது. சென்னை - சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி மெட்ரிக் பள்ளியில் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக மாணவ - மாணவியர் தேர்வு எழுதும் அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. படம்: பு.க.பிரவீன்

19 / 35

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் இன்று (21.9.2020) தொடங்கியது. சென்னை - சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி மெட்ரிக் பள்ளியில் .ஆர்வமுடன் தேர்வு எழுதும் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்களும் தேர்வு எழுத வந்த சிறப்பு மாணவரும். படம்: பு.க.பிரவீன்

20 / 35
21 / 35
22 / 35
23 / 35

அண்ணா - பல்கலைக்கழகம் பெயர் மாற்ற முயற்சியைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (21.9.2020) கருப்பு அடையாள அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். பங்கள் : பு.க.பிரவீன்

24 / 35
25 / 35

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக... பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (21.9.2020) மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது? படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

26 / 35

’நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும்... புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறக் கோரியும்... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (21.9.2020) தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

27 / 35

இன்று (21.9.2020) மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்... மத்திய அரசைக் கண்டித்தும் மோடி அரசின் விவசாய விரோத சட்டங்களை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

28 / 35
29 / 35

சென்னை - மயிலாப்பூர் சோலையப்பன் தெருவில்... வீடு தேடி வரும் நகரும் நியாய விலைக் கடையின் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டன.

30 / 35
31 / 35
32 / 35

வேலூரில் இன்று (21.9.2020) மாலை வானில் திரண்ட கருமேகங்கள் திடீர் என்று என்ன நினைத்ததோ... சிறு சிறு மழைத் துளிகளால் பூமியை நனைத்துவிட்டு கலைந்துச் சென்றது. படம் : வி.எம்.மணிநாதன்

33 / 35
34 / 35
35 / 35

Recently Added

More From This Category

x