Published on : 08 Aug 2020 18:11 pm

பேசும் படங்கள்... (08.08.2020)

Published on : 08 Aug 2020 18:11 pm

1 / 52

வேலூரை அடுத்த வள்ளலார் பகுதியில் இன்று (ஆகஸ்ட் - 8) டீக்கடை, உணவகம், காய்கறி கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் சிவகுமார் கபசுரக் குடிநீர் வழங்கினார். படம் : வி.எம்.மணிநாதன்

2 / 52

வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவுகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று (8.8.2020) சென்னை - செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முன்பு நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயுதப் படை போலீஸார், மகளிர் காவல் பணியாளர்கள் மற்றும் குதிரைப்படையினர் கலந்து கொண்டனர். ‘கரோனா’ தொற்றுப் பரவாமல் இருக்க ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். படங்கள் : ம.பிரபு

3 / 52
4 / 52
5 / 52
6 / 52
7 / 52
8 / 52
9 / 52

வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவுகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று (8.8.2020) சென்னை - செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முன்பு நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயுதப் படை போலீஸார், மகளிர் காவல் பணியாளர்கள் மற்றும் குதிரைப்படையினர் கலந்து கொண்டனர். ‘கரோனா’ தொற்று பரவாமல் இருக்க ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததையும், அவர்கள் அணிந்திருந்த உடைகளின் நேர்த்தியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து... முதலவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது போன்று... மாற்று அதிகாரியை வைத்து ஒத்திக்கைப் பார்க்கப்பட்டது. படங்கள் : ம.பிரபு

10 / 52
11 / 52

வரும் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதையொட்டி... சென்னை - செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது . இதைத் தொடர்ந்து கோட்டையின் எதிரே உள்ள பூங்காவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் இன்று (8.8.2020) சோதனை மேற்கொண்டனர். படம் : பிரபு

12 / 52
13 / 52

புதுச்சேரி - திருச்சிற்றம்பலம் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக… தற்போது (8.8.2020) நெடுஞ்சாலைகள் துறை சார்பில் அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்

14 / 52
15 / 52
16 / 52

8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக அதிகரிக்கும் சட்டத்தை… உடனடியாக திருத்தி அமைக்கக் கோரியும்…. ’கோவிட் வரி’-யை ரத்துசெய்யக் கோரியும்… கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடுபங்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கக் கோரியும்… இன்று புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகில்… - ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில்… ஆர்பாட்டம் நடைபெற்றது. படம் : எம்.சாம்ராஜ்

17 / 52
18 / 52

வரும் 15.ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதையடுத்து… ’கரோனா’ தொற்றுப் பரவலை மனதில் கொண்டு… பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா ஏற்பாடுகளை… புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி - உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் விழா ஏற்பாட்டுக்கான முதற்கட்டப் பணியாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்

19 / 52
20 / 52

நீலம் அமைப்புடன் இணைந்து சென்னை - பெருநகர மாநகராட்சி இன்று (8.8.2020) சென்னை - அயனாவரம் காவல் நிலையம் எதிரில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம்’கோவிட்-19’ பாதுகாப்பு குறித்த… விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன்

21 / 52
22 / 52
23 / 52
24 / 52
25 / 52

தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, மின்சாரத்தை தனியார்மயமாக்கக் கூடாது; முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து… இன்று (8.8.2020 மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

26 / 52

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும்… மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு இன்று (8.8.2020) அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல் முருகன்

27 / 52

திருச்சியை - அடுத்த முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த மேலணைக்கு மாற்றாக அதன் அருகிலேயே புதிய அணைப்பாலம் மற்றும் காப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. 1,650 மீட்டர் நீளம் உள்ள அடித்தளச் சுவர் அமைக்கும் பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மேலும் 7,800 கான்கீரிட் பிளாக்குகள் தயாரிக்கப்பட்டு அடித்தளச் சுவர்களுக்கு இடையே பதிக்கும் பணியும், தூண்கள் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடக்கிறது. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

28 / 52
29 / 52
30 / 52

சுற்றுலாத்தளமான திருச்சி - முக்கொம்பில் உள்ள பூங்காக்கள் மற்றும் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அழகிய வண்ணம் பூசப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் காவிரித்தாய் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

31 / 52
32 / 52

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக… இன்று (8.8.2020) மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

33 / 52

மத்திய அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்திந்திய அஞ்சல் துறை மற்றும் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக… மதுரை - தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று (8.8.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

34 / 52

தெற்கு புறவழிச் சாலையையும்… கொக்கிரகுளம் சாலையையும்… இணைக்கும் அண்ணா சாலையில், பள்ளம் ஏற்பட்டுக் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்பது இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. படம் : மு. லெட்சுமி அருண்

35 / 52

அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி… இன்று (8.8.2020) நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி - தாமிரபரணி போக்குவரத்துப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கத்தைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : மு.லெட்சுமி அருண்

36 / 52

’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வரும் 22-ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தியின்போது தெருக்கள், சாலையோரங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுமா… என்பது உத்தரவாதம் இல்லாத நிலையில், வேலூர் - சூளைமேடு பகுதியில் 3 அடி முதல் 6 அடி வரை விநாயகர் சிலைகளை செய்து முதற்கட்டமாகச் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர். படம் : வி.எம்.மணிநாதன்

37 / 52
38 / 52

சேலம் - பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் இன்று (8.8.2020) முதல்வர் பழனிசாமி தலைமையில் 'கரோனா தொற்றுத் தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ' குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை வழங்கினார்.உடன் ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

39 / 52
40 / 52

சேலம் - பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி. உடன் ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர். படம் : எஸ்.குரு பிரசாத்.

41 / 52
42 / 52

’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறையினர் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள கடைகளுக்குச் சென்று வியாபாரிகள், ஊழியர்களிடம் ’கரோனா’ பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.

43 / 52
44 / 52
45 / 52

பாஜக மாநில மீனவர் அணி சார்பில் காசிமேடு கடற்கரையில் கந்த சஷ்டிக் கவசம் முருகப்பெருமானின் பிரம்மாண்ட கட்-அவுட் மற்றும் வேலுடன் ’வேல் வேல் வெற்றி வேல்’ கோஷத்துடன் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், . நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். படம்: க.ஸ்ரீபரத்

46 / 52

வேலூர் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே இன்று (8.8.2020) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர்… நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பு உத்தரவாதம் செய்திட வேண்டும்; ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்துக்கு 10 கிலோ உணவு தானியங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக மாற்றி நாளொன்றுக்கு ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். பண்ணை வர்த்தகம், மின்சாரச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாகக் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டங்களின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்

47 / 52

கோவை வ உ சி உயிரியல் பூங்காவில் புதிய வரவாக கண்ணாடிவிரியன் பாம்பு 33 குட்டிகளை ஈன்றுள்ளது. படம் : ஜெ .மனோகரன்

48 / 52
49 / 52
50 / 52

கோவை - நஞ்சுண்டாபுரம் மே qபிளவர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு... காய்கறி மற்றும் பழங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய... அப்பொருட்களை வாங்கும் அப்பகுதி மக்கள். படம் : ஜெ. மனோகரன்

51 / 52
52 / 52

Recently Added

More From This Category