Published on : 02 Jun 2020 16:39 pm

பேசும் படங்கள்... (02.06.2020)

Published on : 02 Jun 2020 16:39 pm

1 / 40

மதுரை - தெற்குவாசல் பகுதியில் சுமார் 62 ஆண்டுகளாக காய்கறி விற்பனை நடைபெற்று வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை மாநகராட்சி இந்த இடத்தில் காய்கறி விற்பனை செய்ய தடைவிதித்துள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அந்த காய்கறி வியாபாரிகள்.... மீண்டும் அதே இடத்தில் மார்க்கெட் நடத்த அனுமதி வழங்கக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (2.6.2020) மனு கொடுக்க திரண்டு வந்தனர். படம்; எஸ் கிருஷ்ணமூர்த்தி

2 / 40

கரோனா வைரஸ் தொற்று குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல், முகக்கவசமும் அணியாமல்... 100 நாள் வேலை திட்டத்தின்கீழ்... வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் உள்ள ஏரியில் வேலை செய்யும் கிராம மக்கள். படங்கள்: வி.எம்.மணிநாதன்

3 / 40
4 / 40
5 / 40
6 / 40
7 / 40
8 / 40

மத்திய அரசின்கீழ் இயங்கும் என்.டி.சி பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தை இன்று (2.6.2020) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், என்.டி.சி அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வருகின்றனர். படம்: ஜெ .மனோகரன்

9 / 40

குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால்... கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்தில் இன்று (2.6.2020) மதியம் காத்திருந்த பொதுமக்கள். படம் ஜெ .மனோகரன்

10 / 40
11 / 40

காந்திபுரத்தில் இருந்து சித்ரா வரை செல்லும் தனியார் பேருந்தில் சமூக இடைவெளி இல்லாமல் செல்லும் பயணிகள். படம்: ஜெ .மனோகரன்

12 / 40
13 / 40

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முறையாக கடைகள் ஒதுக்கபடாததால் மாநகராட்சி அனுமதி வழங்க வலியுறுத்தி கடைகளை அடைத்து எதிப்பு தெரிவித்தனர் படம் ஜெ .மனோகரன்

14 / 40
15 / 40
16 / 40

வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு சென்னை, பெங்களூருவைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதித்தோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலையில்... அது குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு சிஎம்சி நிர்வாகம் தகவல் அளிப்பதிலை என எழுந்த புகாரை தொடர்ந்து, சத்துவாச்சாரியில் இருந்து காகிதப்பட்டறைப் பகுதி வழியாக சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் ஆற்காடு சாலையில் தடுப்பு அமைத்து மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்க ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆற்காடு சாலையின் குறுக்கே தடுப்பு அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்

17 / 40
18 / 40

வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் இன்று (2.6.2020) வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது.... வேலூர் - சைதாப்பேட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக காலிஃபிளவர் மூட்டைகளுடன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மினி வேனை... விசாரித்துள்ளனர். அந்த வேனில் இருந்தோர் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்ததால்... சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த வேனை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. கரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன சோதனையில் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க... அந்த வேனில் ’காய்கறி வாகனம்’ என ஸ்டிக்கர் ஒட்டி... காய்கறி மூட்டைகளுக்கு கீழ் குட்கா மூட்டைகளைக் கடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காய்கறி வேனில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 220 கிலோ குட்காவுடன் அந்த வேனையும் போலீஸார் பறிமுதல் செய்து, அக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். தகவல் + படங்கள்: வி.எம்.மணிநாதன்

19 / 40
20 / 40
21 / 40

விபத்தில் சேதமடைந்த லாரியை ஏற்றி க்கொண்டு... இன்று (2.6.2020) காலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி... அதிவேகமாகக் கடந்து சென்ற லாரி. படம்: எம்.மணிநாதன்

22 / 40

யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மின் துறை தனியார்மயக்கப்படும்... என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தடை செய்யக் கோரி... இன்று (2.6.2020) புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. படங்கள்; எம்.சாம்ராஜ்

23 / 40
24 / 40

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின்கீழ்... சேலம் மாவட்டம் தம்பம்பட்டியில் மரக் கைவினைஞர்களுக்கு சிற்பக்கலை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தயாரிக்கப்பட்ட மரச்சிற்பங்கள் சேலம் பூம்பூகார் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மரச்சிற்பங்களை ஆர்வமுடன் பார்வையிடுகிறார் ஒரு பெண். படம்: எஸ்.குரு பிரசாத்

25 / 40

சேலம் மாவட்டம் தம்பம்பட்டியில் மரக் கைவினைஞர்களுக்கான சிற்பக்கலை பயிற்சி வகுப்பில் தயாரிக்கப்பட்ட மரச்சிற்பங்கள் சேலம் பூம்பூகார் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மரச்சிற்பங்களை ஆர்வமுடன் பார்வையிடுகிறார் ஒரு பெண். படம்: எஸ்.குரு பிரசாத்

26 / 40

கரோனா தொற்றுப் பரவல்... அமலில் இருக்கும் 144 தடை உத்தரவு... இவற்றைப் பற்றிய கவலையும் அச்சமும் எல்லோருக்கும் இருந்தாலும் வேளாவேளைக்கு வயிற்றுக்குள் பசிப்புயுல் மையம் கொள்வதை எவரால் தடுக்க முடியும். புதுச்சேரி மாநிலம் - தொண்டமாநத்தம் கிராமப் பகுதியில் உள்ள சாலையில் விதை நெல்லைக் காயவைத்து... உலர்த்தும் விவசாயிகள். படங்கள்: எம்.சாம்ராஜ்

27 / 40
28 / 40

திமுக மற்றும் அதிமுக கட்சி தரப்பினர் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க திரண்டதால் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (2.6.20200 பகல் முழுவதும் பதற்றமும் பரபரப்புடன் காணப்பட்டது . ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மீது மனு கொடுக்க அதிமுகவினர் காவல்துறை காண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர். அதே போல - அதிமுகவினர் மீது மனு கொடுக்க முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் திமுகவினர் அங்கு திரண்டனர்.

29 / 40
30 / 40

வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து எற்படுத்தும் வகையில்... சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களின் மீது... மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனர் படம்: வி.எம்.மணிநாதன்.

31 / 40
32 / 40

ரயிலில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால்... அதற்குரிய கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்--- சென்னை - சென்ட்ரல் முன்பதிவு மையத்தில்... ’ மறு அறிவிப்பு வரும் வரையில் முன் பதிவு கட்டணம் திருப்பி தரப்பட மாட்டது’ என்று அறிவிப்பு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து... ஏமாற்றத்துடன் பலர் திரும்பிச் சென்றனர். படம்: ம.பிரபு

33 / 40
34 / 40

சென்னை நகருக்குள் அரசு ஊழியர்கள் தங்கள் பணி இடங்களுக்கு செல்ல... சிறப்பு பேருந்துகள் இயங்குகின்றன. இவர்கள் டிக்கெட் எடுக்க வசதியாக - பேருந்து நுழைவுவாயிலில் ’பேட்டியெம்’ செயலி அமைக்கப்பட்டு, அதன் மூலம் உரிய கட்டணத்தை செலுத்தும் நடைமுறை பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படம்; ம.பிரபு

35 / 40

சென்னை - சென்ரட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில்... பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்கு கரோனா தொற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் - அந்த அலுவலக வளாக நுழைவுவாயிலில் தடுப்பு அமைத்து... யாரையும் அனுமதிக்கவில்லை. படம்: ம.பிரபு

36 / 40
37 / 40

அசோக் நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதாலும்... தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத காரணத்தாலும்... அப்பகுதியில் கரோனா தொற்று அதிக பரவுவதாலும்... அந்த மார்கெட் மற்றும் அப்பகுதிக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையை நேற்று அதிகாரிகள் தடுப்பு வைத்து அடைத்தனர். படங்கள்: ம.பிரபு

38 / 40
39 / 40
40 / 40

பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்குவதைத் தடுக்கக் கோரி... கோவை பகுதியைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்க மாணவர்கள்... மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க இன்று (2.6.2020) ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். படம்; ஜெ .மனோகரன்

Recently Added

More From This Category