Published on : 31 May 2020 18:24 pm

பேசும் படங்கள்... (31.05.2020)

Published on : 31 May 2020 18:24 pm

1 / 35

புதுச்சேரியில் - கரோனா ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினரை பாராட்டும் வகையிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாவில் கூறியுள்ளபடி... நமஸ்காரப் பயிற்சியை 108 முறை செய்து காண்பிக்கும் யோகா பயிற்ச்சியாளர்கள். படம்: எம்.சாம்ராஜ்

2 / 35
3 / 35
4 / 35

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவாமல் தடுக்க... புதுவை அரசு எல்லைப் பகுதியில்... முழு ஊரடங்கை அமல்படுத்தி வருக்கிறது, மேலும் - புதுவை மதுக் கடைகளுக்கு - தமிழகத்தைச் சேர்ந்தோர் வருவதைத் தடுக்க மது பான வகைகளுக்கு ’கரோனா வரி’ விதிப்பு என புதுவையில் - கூட்டம் கூடாமல் தடுக்க பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் - இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவர்கள்... 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து - அந்தப் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடும் புதுவை காவல் துறையினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

5 / 35
6 / 35
7 / 35

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து நாளை முதல் ரயில்கள் இயங்கவிருப்பதால்... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் - மதுரை ரயில் நிலையம் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

8 / 35

சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்வதை நிறுத்தி... முழு சம்பளத்தையும் வழங்கக் கோரி... திருநெல்வ்வேலி - வண்ணாரப்பேட்டை அரசுப் போக்குவரத்து டிப்போ முன்பு - போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். படம்: மு.லெட்சுமி அருண்

9 / 35

தமிழக அரசு உத்தரவுபடி... தமிழகத்தில் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு... 50 சதவீதப் பேருந்துகள் நாளை (!.6.2020) முதல் இயக்கப்படவுள்ளன. இதற்காக - சேலம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. படம் : எஸ்.குரு பிரசாத்

10 / 35

கரோனா தொற்று பரவல் காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக - இந்தியா முழுவதும் ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் - நாளை (1.6.2020) முதல் சில இடங்களில் ரயில்கள் செயல்பட உள்ளன. இதையடுத்து - மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் வைகை விரைவு ரயில் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 35

தமிழகத்தில் கரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ள மாவட்டங்களில்... வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து உணவு உண்ணும் வ்கையில் உணவகங்கள் செயல்பட அனுமதிக்கலாம்... என அரசு அறிவித்துள்ளது. இதற்காக சேலம் பிரட்ஸ் சாலையில் உள்ள உணவகமொன்றில்... சாப்பிடும் மேஜைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர். படம் : எஸ்.குரு பிரசாத்

12 / 35

மதுரை - பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் அருகே - சம்பள குறைப்பு காரணமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இன்று (31.5.2020) தயார் நிலையில் இருந்த... மதுரை போக்குவரத்துத் தொழிலாளர்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

13 / 35

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்... மயிலாப்பூர் தீயணைப்பு மீட்புபணிகள் வளாகத்தில் இன்று - குழந்தைகளுக்கான கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

14 / 35
15 / 35

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க... சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் சென்னை மாநகரில் இப்போதும் ஊரடங்கு அமலில்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் சமூக இடைவெளி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை காற்றில் கடாசிவிட்டு... இன்று (31.5.2020) சென்னை - காசிமேடு மீன் மார்கெட்டில் மீன் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம்: க.ஸ்ரீபரத்

16 / 35
17 / 35

கரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி... சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடவடிக்கையைக் கண்டித்து... அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் சென்னை - பல்லவன் டிப்போவில் இன்று (31.5.2020) உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள். படம்: க,ஸ்ரீபரத்

18 / 35

தமிழகத்தில் - கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் இருந்த ஊரடங்குக்குப் பிறகு... கடந்த வாரங்களில் விலையேற்றத்துடன் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து - தமிழகத்தில் - மது அருந்துவோர் மலிவு விலையில் கிடைக்கும் சாராயத்தை வாங்குவதற்காக - இன்று புதுச்சேரி கொம்பந்தான்மேடு சாராயக் கடைக்கு... தங்களின் உயிரையும் பணயம் வைத்து... தெண்பெண்னை ஆற்றை கடந்து சென்றனர். படம்: எம்.சாம்ராஜ்

19 / 35

கடலுாரில் இருந்து புதுச்சேரி மாநிலம் கொம்பந்தான்மேடு சாராயக் கடைக்கு சாராயம் அருந்த தெண்பெண்னை ஆற்றை நீச்சல் அடித்து கடந்து செல்லும் நபர். படம்: எம்.சாம்ராஜ்

20 / 35

கடலுாரில் இருந்து புதுச்சேரி மாநிலம் கொம்பந்தான்மேடு சாராயக் கடைக்கு சாராயம் அருந்த நடக்க முடியாத தனது நண்பரை தெண்பெண்னை ஆற்றங்கரையில் உப்பு முட்டையாக முதுகில் சுமந்து செல்கிறார் ஒருவர். படம்: எம்.சாம்ராஜ்

21 / 35

நாளை (1.6.2020) முதல் 50 சதவீதப் பேருந்துகள் இயங்கும் என்ற அரசு உத்தரவை அடுத்து... நெல்லை - வண்ணாரப்பேட்டை பேருந்து பணிமனையில் தயாராக இருக்கும் பேருந்துகள். படம்: மு. லெட்சுமி அருண்

22 / 35

கரோனா தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில்... சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும்... கட்டுமானத் தொழிலில் கொத்தனார் வேலையில் ஈடுபட்டு வந்த எங்களுக்கு சரியான வேலையில்லை. தொழில் இல்லாததால் கையில் காசும் இல்லை. அதனால் குறுக்குத்துறையில் ஆற்றுக்கு மீன் பிடிக்க வந்திருக்கோம். கிடைக்கிற மீனை பிள்ளைகளுக்கு சமைச்சு கொடுக்கலாம் என்று வந்திருக்கோம் என்கிறார் இந்த கொத்தனார் படங்கள்: மு. லெட்சுமி அருண்

23 / 35
24 / 35

கத்திரி வெயில் நிறைவடைந்தாலும்... சேலம் மாவட்டத்தில் வெயில் கடுமையாகவே உள்ளது. இதனால் வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டு வருவதால்... விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் இரையைத் தேடி வனப் பகுதியை விட்டு... வெளியே வரத் தொடங்கியுள்ளன. சேலம் - மல்லூர் பகுதியில் சாலையோரம் இரையைத் தேடி உலா வந்த ஆண் மயில். படம்: எஸ்.குரு பிரசாத்

25 / 35
26 / 35
27 / 35

நாளை முதல் (1.6.2020) 50 சதவீதப் பேருந்துகள் இயங்கலாம்.... என்ற அரசு உத்தரவை அடுத்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலைய தற்காலிக காய்க்கறி மார்கெட்டை எடுத்துவிட்டு.... பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள். படம்: ஜெ .மனோகரன்

28 / 35
29 / 35

கடந்த 2 மாதங்களாக ரயில்கள் இயங்காமல் இருந்த நிலையில்... நாளை முதல் (1.6.2020) ரயில்கள் இயங்கவிருப்பதால்.. கோவை ரயில் நிலைய நடைபாதைகளை தண்ணீர்விட்டு சுத்தம் செய்யும் ஊழியர்கள். படம் : ஜெ .மனோகரன்

30 / 35
31 / 35

கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் (1.6.2020) பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பதால்... மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளை சரிசெய்து.... இருக்கைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி... கிருமி நாசினி தெளித்து... தயார் நிலையில் வைக்கும் ஊழியர்கள். படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

32 / 35
33 / 35
34 / 35

கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் (1.6.2020) பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பதால்... மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளை சரிசெய்து.... இருக்கைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி... கிருமி நாசினி தெளித்து... தயார் நிலையில் வைக்கும் ஊழியர்கள். படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

35 / 35

Recently Added

More From This Category