Published on : 10 Jun 2023 09:31 am

வரும்... ஆனா வராது! - தமிழ் சினிமாவில் கைவிடப்பட்ட 13 படங்கள் | போட்டோ ஸ்டோரி

Published on : 10 Jun 2023 09:31 am

1 / 13

‘எந்திரன்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஷங்கர் முதலில் டிக் செய்து வைத்திருந்தது கமல்ஹாசனை. ப்ரீத்தி ஜிந்தா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின. ஆனால், இப்படம் கைவிடப்பட்டு பின்னாளில் ரஜினி நடிப்பில் ‘எந்திரன்’ உருவானது.

2 / 13

கமல்ஹாசன் மட்டுமின்றி தமிழி சினிமாவுக்கே கனவுப் படம் ‘மருதநாயகம்’. பெரும் பொருட்செலவில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் உருவான இப்படம் பல்வேறு சிக்கல்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. இப்படம் இனியும் வெளியாகுமா என்பது கமலுக்கே வெளிச்சம்.

3 / 13

2004-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருந்த ‘ஜக்குபாய்’ படத்துக்கு பெரும் ஹைப் கொடுக்கப்பட்டது. பிறகு கைவிடப்பட்ட இப்படம் சரத்குமார், ஸ்ரேயா நடிப்பில் வெளியானது.

4 / 13

‘கோச்சடையான்’ படத்தின் தொடர்ச்சியாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் ‘ராணா’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகவிருந்த நிலையில், ரஜினியின் உடல்நிலை காரணமாக அப்படம் கைவிடப்பட்டது.

5 / 13

2004-ஆம் ஆண்டு அஜித், அசின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ‘மிரட்டல்’ என்றொரு படத்தை தொடங்கினார். பின்னர் அது கைவிடப்பட்டது.

6 / 13

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்போது பெரிதும் பேசப்பட்டது. ஆனால், இப்படம் ட்ராப் ஆகிவிட்டது.

7 / 13

2011-ஆம் ஆண்டு தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. ஆனால், பாதியில் நிறுத்தப்பட்ட அப்படம் பிறகு சில மாற்றங்களுடன் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் ‘இரண்டாம் உலகம்’ என்ற பெயரில் வெளியானது. ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பில் வேறொரு படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கினார்.

8 / 13

2014ஆம் ஆண்டு ‘விக்ரம்’ நடிப்பில் ‘கரிகாலன்’ என்ற ஒரு படம் உருவானது. பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாதியில் கைவிடப்பட்டது.

9 / 13

நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிக்கத் தொடங்கிய படம் ‘வேட்டை மன்னன்’. இப்படத்தின் அறிமுக டீசர் அப்போது வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படம் நிறைவு பெறவில்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ படத்தை எடுத்தார் நெல்சன்.

10 / 13

2006ஆம் ஆண்டு சிம்பு - அசின் இருவரையும் வைத்து ஒரு காதல் படத்தை இயக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டிருந்தார். இப்படத்துக்கு ‘ஏசி’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கான போட்டோஷூட் நடந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டது.

11 / 13

‘மன்மதன்’ வெற்றிக்குப் பிறகு சிம்பு, நமீதா, சந்தானம் நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘கெட்டவன்’. இந்த படத்தில் சிம்புவின் கெட்டப் பேசப்பட்டது. ஆனால் இப்படம் சாத்தியமாகவில்லை.

12 / 13

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘23ஆம் புலிகேசி’ படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகமான ‘24ஆம் புலிகேசி’ படம் ஷங்கர் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்டது. ஆனால் ஷங்கர் - வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்பட்டது.

13 / 13

தமிழ் சினிமாவின் முதல் முழுநீள ஸ்பூஃப் வகைப் படமாக வெளியான ‘தமிழ்ப் படம்’ தந்த வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கி முடித்த படம் ‘ரெண்டாவது படம்’. விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் வரை வெளியாகிவிட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களால் இப்படம் கடைசி வரை வெளியாகவே இல்லை.

Recently Added

More From This Category

x