திண்டுக்கல்லில் பாமக ஆர்ப்பாட்டம் :

திண்டுக்கல்லில் பாமக ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பாமக சார்பில் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி ஜோதிமுத்து, மாவட்டச் செயலாளர்கள் ஜான்கென்னடி, வைரமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷமிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in