An amazing aluminum bird plane!
An amazing aluminum bird plane!

விமானம் - ஓர் ஆச்சரிய அலுமினியப் பறவை!

Updated on
2 min read

ஒவ்வொரு முறை கடந்து போகும்போதும் குழந்தைகளை ஆச்சரியப்படுத்தக்கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால், அது விமானம்தான்.

பறக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை, விமானத்தில் ஏறிப் பறப்பதன் மூலம் மனிதர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

உலகில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு விமானம் வானில் ஏறிப் பறந்து கொண்டிருக்கிறது, தரையிறங்கிக் கொண்டிருக்கிறது.

விமானத்தின் டயர்கள் நைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்டவை. அதில் ஆக்சிஜன் இல்லை. விபத்து ஏற்பட்டால் டயர் தீப்பிடிக்காது. தீப்பிடித்து எரிய ஆக்சிஜன் அவசியம்.

லியனார்டோ டாவின்சிதான் விமானத்துக்கு முதல் டிசைனை வடிவமைத்தவர். மனித சக்தி மூலம் விமானத்தைப் பறக்க வைக்க முடியாது, இயந்திர சக்தி தேவை என்று சொன்னவர்.

வில்பர் ரைட், ஆர்வில் ரைட் ஆகிய இருவரும் முதலில் பறக்கச் செய்த கிட்டி ஹாக் என்ற உலகின் முதல் விமானம், 12 விநாடிகள் மட்டுமே பறந்தது.  

உலகிலுள்ள வான்வழி விமானப் பாதைகளிலேயே பிரச்சினைகள் குறைந்தது ஆர்டிக்கின் மேற்பகுதி. சிக்கலான பகுதியாக பெர்முடா முக்கோணப் பகுதி கருதப்படுகிறது.
 

இப்போது பறந்துகொண்டிருக்கும் பெரும்பாலான விமானங்கள், ஜெட் விமானங்களே.

விமானத்தில் உள்ள கழிப்பறைகள் மிகவும் செலவு மிகுந்தவை. அதில் அடங்கியுள்ள சிக்கலான குழாய் அமைப்பு அப்படி. 
 

வானில் பறப்பதால் விமானத்துக்குள் அழுத்தம் அதிகமாக இருப்பதன் காரணமாக, தண்ணீரைச் சூடாக்குவதற்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படும். 

விமானக் கழிப்பறையில் தண்ணீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு, விமானத்தில் இருந்து 933 கி.மீ. வேகத்தில் வெளியேற்றப்படும். இது உடனடியாகப் பனிக்கட்டியாகிவிடும். | தகவல்: ஆதி
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in