‘பெல்லட்’ குண்டுகள் என்ன செய்யும்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கூட்டத்தினரைக் கலைக்க துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என காவல் துறையும் அரசும் மறுத்துள்ளன. ஆனால், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, முகத்திலும் உடலிலும் காயங்களுடன் இருந்த சாஹில் லோச்சப் என்ற இளைஞரை தனது அருகில் நிறுத்தியிருந்தார்.
அப்போது “பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று அரசு மறுத்து வருகிறது. ஆனால், இதோ அதற்குச் சான்று” என்று கூறிய ராகுல், அந்த இளைஞரின் டி-ஷர்ட்டை உயர்த்தி காட்டினார். “அரசு பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். பெல்லட் குண்டு தாக்கியதால் சாஹில் தனது வலது கண்ணால் பார்க்க முடியவில்லை. இனி அவருக்குப் பார்வை திரும்புமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. டெல்லி நஜஃப்கர் பகுதியைச் சேர்ந்த இவர் டெல்லி காவல்துறையில் சேர விரும்பினார்” என்றார் ராகுல். இந்த பெல்லட் துப்பாக்கி குண்டுகளின் தன்மைகள் குறித்து சற்றே தெளிவாகச் சொல்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.