எந்தக் கட்சி ‘முன்னோடி’? - ரேம்ப் வாக் மேடையும் ‘காப்பி’யும்

தமிழ்நாட்டில் நவீன அரசியல் மேடைகளை அமைத்ததில் முன்னோடி பாமகதான். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், ரேம்ப் வாக் மேடை, தலைவர் முன்னே நடந்து பேசும் அமைப்பு, காலர் மைக் என வித்தியாசம் காட்டி வியக்க வைத்தார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்குப் பிறகுதான் இத்தகைய மேடை செட்-அப்களை பின்பற்ற ஆரம்பித்தன.

அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தொண்டர்களுக்கு பக்கமாய் நின்று கையசைத்தார். மகளிர் மாநாடுகளில் கூட்டத்துக்கு மத்தியில் திறந்த வாகனத்தில் சென்று மேடையை அடைவது போல் மேடை அமைக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியும் இதே பாணியை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், மேடை விஷயத்தில் திமுக தங்களைப் பார்த்து காப்பி அடிப்பதாக தவெக-வினர் சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற ‘தமிழக விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்திலேயே ரேம்ப் வாக் மேடையை அமைத்துவிட்டது திமுக. அந்த மேடையில் தான், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின்.

இப்படி, மேடைகள் மட்டுமல்லாது, மேடைக்கு எதிரே மக்கள் அமரும் இடங்களும் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 500 பேர் அளவில் அமரும் அளவுக்கு தனித் தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு நெரிசல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றன. யாரும் பசி, தாகத்தால் அவதிப்படாத அளவுக்கு ஹாட் பாக்ஸ்களில் பிரியாணியும், தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகளும் பேக்கேஜ்களாக முன்கூட்டியே இருக்கைகளில் வைக்கப்படுகின்றன.

எந்தக் கட்சி ‘முன்னோடி’? - ரேம்ப் வாக் மேடையும் ‘காப்பி’யும்
திமுக கூட்டணியில் தேமுதிக - பிரேமலதா ‘டிக்’ செய்தது ஏன்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in