அம்​பத்​தூர் தொகுதியை ஆட்கொள்ளும் கட்சி எது?

தொகுதி மறுசீரமைப்​புக்குப் பிறகு 2011-ம் ஆண்டு வில்லிவாக்கத்தில் இருந்து பிரித்து உரு​வாக்​கப்​பட்​டது அம்​பத்​தூர் தொகு​தி. வேக​மாக வளர்ச்​சி​யடைந்து வரும் நகர்ப்​புற கட்டமைப்பு​கள் அடங்​கிய இத்​தொகு​தி, தொழிற்​துறை​யாலும், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களாலும் வேக​மாக வளர்ச்சியடைந்து, பொருளா​தார மைய​மாக உரு​வெடுத்​துள்​ளது.

ஆசி​யா​வின் மிகப்​பெரிய தொழிற்​பேட்​டைகளில் ஒன்​றான அம்பத்​தூர் தொழிற்​பேட்​டை, சைக்​கிள் தயாரிக்​கும் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்​கள் தயாரிக்​கும் தொழிற்சாலைகள் என ஏராள​மான தொழிற்​சாலைகள், தகவல் தொழில் ​நுட்ப நிறு​வனங்​கள் இங்கு இயங்கி வரு​கின்​றன. அம்பத்தூர் தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வேதாச்சலம் 99,330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.ரங்கநாதன் 76,613 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டர், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன்மவுலானாவை 17,498 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜோசப் சாமுவேல் 42,146 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து, அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டரின் வசமிருந்த அம்பத்தூர் தொகுதியை தன்வசப்படுத்தினார்.

தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள்: தொழில்​துறை​யில் உச்சத்தில் இருந்​தா​லும், அடிப்​படைத் தேவை​களில் அம்​பத்​தூர் தொகுதி இன்​னும் பின்​தங்​கியே இருப்​ப​தாக மக்​கள் அதிருப்தி தெரிவிக்​கின்​றனர். குறிப்​பாக, விபத்து மற்​றும் அவசர​கால சிகிச்சைகளுக்கு கீழ்ப்​பாக்​கம் அல்​லது ஸ்டான்லி மருத்துவமனை​களையே சார்ந்​திருக்க வேண்​டிய நிலை உள்​ளது.

எனவே, இத்​தொகு​தி​யில் அரசு பொது மருத்​து​வ​மனை அமைக்கப்பட வேண்​டும் என்​பது நீண்​ட​கால கோரிக்​கை​யாக உள்​ளது. அதே​போல், அரசு கலைக் ​கல்​லூரி மற்​றும் ஆண்களுக்கான அரசு உயர்​நிலைப் பள்ளி வேண்​டும், கொரட்​டூர் ஏரி​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி நன்​னீர் ஏரி​யாக மாற்ற வேண்​டும், போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில் சாலை, ரயில்வே பாலங்​களை விரிவுபடுத்​துதல், சேதமடைந்த சாலைகளை சரி செய்​தல் போன்​றவை தொகுதி மக்​களின் கோரிக்​கைகளாக உள்ளன.

வேட்​பாளர்​கள் பின்​புலம்:

இந்த தேர்​தலில் திமுக சார்​பில் அ.பு.பூர்​ணிமா என்ற புதிய முகத்தை அக்​கட்சி களம் இறக்கியுள்ளது. அதே​போல், அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக சார்பில் கே.என்​.சேகர் போட்​டி​யிடு​கிறார். தனது பழைய கோட்டையை மீட்​டெடுக்க வேண்​டும் என்​ப​தில் அதி​முக​ தீவிரமாக களப்​பணி​யாற்றி வரு​கிறது. இவ்​விரு பெரிய கட்சிகளுக்கு இணை​யாக, கடந்த தேர்​தலில் மூன்​றாம் இடம்பிடித்த நாம் தமிழர் கட்​சி​யின் தெ.க.சிலம்​பரசனும், முதன்முறை​யாகத் தேர்​தல் களத்தை காணும் விஜய்​யின் தவெக வேட்​பாளர் ஜி.பால​முரு​க​னும் இளைஞர் பட்டாளத்​துடன் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

வட மாவட்​டங்​களில் இருந்து குடிபெயர்ந்த தொழிலா​ளர்​கள் மற்றும் வன்​னியர், ஆதித் ​தமிழர் சமூக மக்​களின் வாக்​கு​களே இங்கு வெற்றி தோல்​வியை தீர்​மானிக்​கும் காரணி​களாக உள்ளன. பலமுனைப் போட்டி நில​வுவ​தால், இம்​முறை அம்​பத்​தூர் தொகு​தி​யின் வாக்​கு​கள் பலவாறாக பிரியக்​கூடும். வெற்றி வித்தியாசமும் மிகக் குறைந்த அளவில்​தான் இருக்​கும் என கணிக்​கப்​படு​கிறது. இதனால் அம்பத்​தூர் தொகு​தியை ஆட்கொள்ளும் கட்சி எது என்​ப​தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p><em>திமுக - அ.பு.பூர்​ணிமா | பாமக - கே.என்​.சேகர் |   தவெக - ஜி.பால​முரு​க​ன் |நாதக - தெ.க.சிலம்​பரசன்</em></p></div>
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in