விஜய் டெல்லி விசிட் ‘அரசியல்’ சலசலப்புகள் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

பிரதமர் மோடி உடனான சந்திப்பு வெறும் 10 நிமிடம் மட்டுமே நடந்தது, செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தது, சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்காதது என முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்ட தமிழக முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் ரீதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை சந்​திக்​காமல் சென்​னைக்கு திரும்​பிய​தில் பல்​வேறு அரசி​யல் காரணங்​கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்​தில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது எழுந்த குதிரை பேர சர்ச்​சைகள், கர்​நாடக காங்​கிரஸில் வெடித்​துள்ள உள்​கட்சி பிரச்சினை போன்​றவற்​றால் இப்போது காங்​கிரஸ் தலை​வர்​களைச் சந்​தித்​தால் அது தேவையற்ற விவாதங்​களை உரு​வாக்​கும் என்​ப​தால் விஜய் இந்​தச் சந்​திப்​பைத் தவிர்த்​த​தாக ஒருதரப்​பில் தகவல்​கள் கூறப்​படு​கின்​றன. ஆனால் மற்​றொரு தரப்போ காங்​கிரஸ் தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு நடை​பெறாததற்கு பின்​னணி​யில் சில அரசி​யல் அழுத்தங்களும் இருக்​கலாம் என்​கிறார்​கள். இது குறித்து விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

விஜய் டெல்லி விசிட் ‘அரசியல்’ சலசலப்புகள் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
லிவ்-இன் நிபந்தனைகள் - அசாம் ‘யுசிசி’ சொல்வது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in