மோடி அரசை விஜய் ‘டீல்’ செய்வது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

டெல்​லி​யில் பிரதமர் தலை​மை​யில் நடை​பெற்ற நிதி ஆயோக் கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் எதிர்ப்​புக் காட்டாமல் கலந்து கொண்டதுடன், “மத்​திய அரசுக்கு ஆக்கபூர்​வ​மான ஒத்​துழைப்​புத் தரு​வோம்” என்று அந்​தக் கூட்​டத்​தில் பேசி இருப்​பது ஆளும் பாஜக வட்​டாரத்தை ஆனந்​தப்பட வைத்​திருக்​கிறது. தங்​களின் கொள்கை எதிரி பாஜக என்று சொன்​னாலும் ஆட்​சிக்கு வந்த நாள் முதலாகவே அரசி​யலை​யும் அரசு நிர்வாகத்​தை​யும் தனித் தனி டிராக்​கிலேயே வைத்​திருக்​கிறார் முதல்​வர் விஜய் என்​கிறார்​கள் தவெக மாநில நிர்​வாகி​கள்.

எதற்​கும் வாய் திறக்​காமல் இருக்​கிறார் என்ற விமர்சனங்களுக்கு மத்​தி​யில், மத்​திய அரசுடன் விஜய் நல்லுணர்வை பேண விரும்புவதாகவே தெரி​கிறது. அவரின் இந்த அணுகு​முறை​யால் தானோ என்​னவோ, பேரிடர் நிவாரண நிதி​யாக 1,000 கோடி ரூபாயை தமிழகத்துக்​குத் தந்​திருக்​கிறது மத்​திய அரசு.

இப்​போ​திருக்​கும் சூழலில் விஜய்க்கு இத்​தகைய அணுகுமுறை அவசி​யம்தான். ஆனால்​, இதே ரூட்​டில்​ பயணித்​து தமிழகத்​தின்​ தேவைகளை மத்​தி​ய அரசிடம்​ தடை​யின்​றி பெற்று ​விடு​வா​ரா விஜய்​ என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

மோடி அரசை விஜய் ‘டீல்’ செய்வது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
எப்படி ‘மிஸ்’ ஆச்சு? - திமுக ஆய்வுக் குழு பட்டியல் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in