சீமானின் ‘ஷார்ட்ஸ்’ உத்தி எடுபடுமா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காணொலி படைப்புகள் மூலம் சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சியில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறுகிறது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடத்தப்படும் இந்த மாநாட்டை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னெடுப்பாக கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநாட்டின் நோக்கங்களையும், அதை பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசியல் கருத்துகளுடன் 30 விநாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரையிலான குறுகிய காணொலிகளாக உருவாக்க வேண்டும். அதாவது, சோஷியல் மீடியாவில் வைரல் ஆகக் கூடிய ‘ஷார்ட்ஸ்’ ஆக உருவாக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் வீடியோக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து, அதை தகவல் தொழில்நுட்ப பாசறையின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மேற்கோள்காட்ட வேண்டும் எனவும், இதில் தேர்வு செய்யப்படும் காணொலிகள் தகவல் தொழில்நுட்ப பாசறையின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான மக்களை கவரும் வகையில் மிகச்சிறந்த காணொலிகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு சீமான் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி கவுரவிக்க உள்ளார். இத்துடன், தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவளிக்கும் ஊடகங்களிலும் இவற்றை வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது, தேர்தல் களத்தில் நாதக-வின் கருத்துகளை டிஜிட்டல் தளங்களில் வலிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

சீமானின் ‘ஷார்ட்ஸ்’ உத்தி எடுபடுமா?
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in