உ.பி.யில் 3-வது அணி... ஒவைசி - ஆசாத் ‘ப்ளான்’ என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

உத்​தரப் பிரதேச சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்​டு தொடக்கத்தில் நடைபெற உள்​ளது. இதில், ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றத் தீவிரமாகப் பணி​யாற்றி வரு​கிறது. பிர​தான எதிர்க்கட்சிகளான சமாஜ்​வா​தி​யும் காங்​கிரஸும் கூட்டணி அமைத்​துப் போட்டியிடுகின்​றன. இச்சூழலில், மக்​களவை எம்​.பி-க்​களான ஹைத​ரா​பாத்​தின் அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் உத்தரப் பிரதேச நாகினா தொகுதி​யின் சந்திரசேகர ஆசாத்​தின் ‘ஆசாத் சமாஜ் கட்சி - கான்​ஷி​ராம்’ ஆகியவை கூட்​டணி அமைத்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் தலித்​ மக்கள்தொகை 21 சதவீதம். முஸ்​லிம்​ மக்​கள்தொகை 19 சதவீதம். மொத்தம் 40 சதவீதம். சுமார் 41 தொகு​தி​களில் தலித், முஸ்​லிம் வாக்காளர்களின் எண்​ணிக்கை 50 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக உள்​ளது. இந்தப் பின்புலத்தில் ஒவைசி - ஆசாத் கூட்டணியின் தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

உ.பி.யில் 3-வது அணி... ஒவைசி - ஆசாத் ‘ப்ளான்’ என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பஞ்சாப் தேர்தல் களமும் போதைப்பொருள் பிரச்சினையும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X