ஜேஜிஎஃப்: ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் உருவானது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டம், துக்​காலி மண்​டலம், ஜொன்னகிரி பகு​தி​யில் புதிய தங்​கச் சுரங்​கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இந்​தி​யா​வின் முதல் தனி​யார் தங்​கச் சுரங்​கம் ஆகும். இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு திறந்​து ​வைத்திருக்கிறார். அப்போது அவர் பகிர்ந்த தகவல்களை முதலில் பார்ப்போம்.

ராயல சீமா பகு​தியை ரத்​தின சீ​மா​வாக மாற்​று​வது இந்த ஜொன்​னகிரி​யில் தொடங்க உள்​ளது. இப்​பகு​தியை முன்பெல்லாம் சுவர்​ணகிரி என்று அழைத்​தனர். அசோக சக்​கர​வர்த்​தி​யின் 4-வது தலை நகரம் இது​வாகும். பல நூறு வருடங்​களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்​தின கற்கள், தங்​கம் போன்​றவற்றை கொட்டி விற்பனை செய்வார்​கள். அசோகர் காலத்து சாசனங்​கள் இதை நமக்கு தெரிவிக்​கின்​றன.

ஒரு காலத்​தில் கேஜிஎஃப் தங்​கச் சுரங்​கம் குறித்து நாடு முழு​வதும் பரவலாக பேசப்​பட்​டது. ஆனால் இப்​பொழுது ஜொன்​னகிரி குறித்து நாடு முழு​வதும் பேசப்​படு​கிறது. இங்கு ஆண்​டுக்கு ஒரு டன் தங்​கம் வெட்டி சுத்​தம் செய்யப்படும். ஆரம்​பத்​தில் 400 கிலோவில் தொடங்கி போகப்​போக 1,000 கிலோவுக்கு வரும்.

தற்போது இங்கு 800 ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்​கள் நியமனம் செய்யப்படுவர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்​கள் பணி செய்​வார்​கள். ஜொன்​னகிரி ஆந்​தி​ரா​வின் ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்கப்படும் என்றார் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு.

இந்தியாவில் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் உதயமாகி இருக்கிறது இந்த ஜேஜிஎஃப். ஜொன்னகிரி கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அப்பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தை தோண்ட உள்ளனர். கூடுதலாகவும் நிலங்களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். இந்த தங்கச் சுரஙத்தின் மதிப்பு 7,500 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் 400 கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 1,000 கிலோ தூய தங்கம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய இயலும் எனச் சொல்லப்படுகிறது. இந்த சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிட் மற்றும் திரிவேணி எர்த்மூவர்ஸ், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறார்கள். இந்த சுரங்கப் பணிகள் தாக்கமாக குர்னூல் மாவட்டம் அமைந்திருக்கும் ராயலசீமா பகுதி பெரும் வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 2000-ம் ஆண்டில் மூடப்பட்டபின் நாட்டில் ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை டன் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது. இப்போது ஜொன்னகிரியில் தங்கம் கிடைக்கும் பட்சத்தில் தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சுரங்கம் தோண்டுவதற்கு உலகிலேயே அதிநவீன எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த இருக்கிறோம். கோலாருக்கு அடுத்து ஜொன்னகிரி மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய நிலவியல் துறையினர் முதலில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டை விட தங்கம் வளம் இங்கு அதிகமாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

15 முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கம் வெட்டி எடுக்க முடியும், நிலத்தை துளையிடுதல், தோண்டுதல், பாறைகளை அரைத்தல் போன்றவை கார்பன் இன் லீச் தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்” என்று திரிவேணி எர்த்மூவர்ஸ் மேலாண் இயக்குநர் பி.கார்த்திகேயன்.

ஜேஜிஎஃப்: ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் உருவானது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in