தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளின் புதிய ‘நகர்வுகள்’ - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்துவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்.
இவர் இப்படிச் சொன்னாலும் இதுகுறித்தான விவாதங்கள் முஸ்லிம் இயக்கங்களில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதேவேளையில், “முஸ்லிம் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் திமுக-வில் இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்த மறந்தே போய்விடுகிறது திமுக தலைமை” என்ற புலம்பல்களும் கொஞ்சம் சத்தமாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இது குறித்து விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.