நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘பதவி நீக்க’ தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமா?

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​ம் விவ​காரத்​தில், சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவைத் தலைவர் ஓம் பிர்​லா​விடம், இண்​டியா கூட்​ட​ணியை சேர்ந்த 120 எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். இந்த பதவி நீக்க தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமா என்பதைப் பார்ப்போம்.

திமுக எம்​.பி.க்​கள் கனி​மொழி, டி.ஆர்​.​பாலு, சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ், காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் இருந்​தனர். இந்த பதவி நீக்க தீர்​மானத்​தில் மொத்தம் 120 எம்.பி.க்கள் கையெழுத்​திட்​டுள்​ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முடிவெடுப்பார்.

நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு தீர்மானம் தர வேண்டும். பின்னர் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால் 3 நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் என 3 பேர் இருப்பார்கள்.

இந்தக் குழு, ஆதாரங்களை ஆராய்ந்து விசாரிக்கும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தையும் விசாரணைக் குழு கேட்கும். இதன்பின்னர் விரிவான அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் விசாரணை குழு சமர்ப்பிக்கும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமும் அதன் பின்னர் வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

பதவி நீக்கம் செய்ய அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இல்லாவிட்டால் தீர்மானம் நிராகரிக்கப்படும். ஒருவேளை ஆதரவு கிடைத்துவிட்டால், அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.

அதைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியை, பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு போதுமான எம்.பி.க்கள் இல்லை. எனவே, இந்தத் தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘பதவி நீக்க’ தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமா?
இண்டிகோ பிரச்சினையின் பின்புலம் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in