‘எஃப்சிஆர்ஏ’ மசோதாவும், எதிர்க்கட்சிகள் அதிருப்தியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்​கு​முறை திருத்த மசோதாவுக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். தற்​போது சட்​டத்​தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டு, FCRA எனப்படும் வெளிநாட்டு பங்​களிப்பு ஒழுங்​கு​முறை திருத்த மசோதா 2026 வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலுவை​யில் உள்​ளது.

வெளி​நாட்டு நன்​கொடைகள் மூலம் எந்த மாநிலத்​தில் என்னென்ன தொண்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்ளன என்​பதை தொண்டு நிறு​வனங்​கள், அதாவது என்​ஜிஓக்​கள் உறு​தி​மொழி பத்​திர​மாக தாக்​கல் செய்ய வேண்​டும். வெளி​நாட்டு நன்​கொடைகளை ஒரு​போதும் மதமாற்றத்துக்கு பயன்​படுத்​தக்​ கூ​டாது. என்​ஜிஓக்​களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி​நாட்டு நன்​கொடைகளால் உருவாக்கப்பட்ட என்​ஜிஓக்​களின் சொத்​துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோ​தா​வில் தெரிவிக்கப்பட்டு உள்​ளது.

சமீபத்திய புள்​ளி​விவரத்​தின்​படி நாடு முழு​வதும் 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. 15,212 என்​ஜிஓக்​களின் பதிவு காலா​வ​தி​யாகி உள்​ளது. சுமார் 14,449 என்​ஜிஓக்​கள் மட்​டுமே செயல்​பாட்​டில் உள்​ளன.

FCRA மசோ​தா​வின் மூலம் உரிம பதிவு ரத்து செய்​யப்​பட்ட என்ஜிஓக்களின் சொத்​துகளை அரசு நிர்​வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்​ளும் என்று எதிர்க்​கட்சி தலைவர்கள் குற்​றம்சாட்டி வரு​கின்​றனர்.

இதே காரணத்தை சுட்டிக்காட்டி பல்​வேறு கிறிஸ்​தவ, முஸ்​லிம் மதம் சார்ந்த என்​ஜிஓக்​களும் மசோ​தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்றன.

இந்த மசோ​தாவை நிறைவேற்ற மக்​களவை, மாநிலங்​களவை​யில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு போதிய பலம் உள்​ளது என்பது கவனிக்கத்தக்கது.

நா​டாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் இந்த மசோ​தாவை காங்கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக எதிர்க்​கும்​ எனத் தெரிகிறது.

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற திமுக எம்.பி வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆகஸ்ட் 6 அன்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

2026 மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட FCRA திருத்தச் சட்ட முன்வரைவு 2026-ஐத் திரும்பப் பெறவும், FCRA சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எஃப்சிஆர்ஏ’ மசோதாவும், எதிர்க்கட்சிகள் அதிருப்தியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘கல்’ ட்ரோன் - உலக ஆயுதச் சந்தையில் இந்தியாவின் புதிய ‘பிரம்மாஸ்திரம்’!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in