கொந்தளித்த காங்கிரஸ்... ‘பணிந்த’ திமுக!
தமிழக காங்கிரசில் சமீபத்தில் புதிதாக 71 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் கட்சியில் உள்ள குறைபாடுகளையும், கூட்டணி கட்சியான திமுக மீதான அதிருப்தியையும் கொட்டித் தீர்த்துள்ளனர்.
குறிப்பாக திமுக தொடர்ந்து காங்கிரசை அலட்சியப்படுத்துகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருந்தும், அவர்கள் இன்னும் குழு அமைக்கவில்லை. கடந்த முறை 25 தொகுதிகள்தான் கொடுத்தார்கள். இந்தமுறை மேலும் குறைப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் நாம் எப்படி வளர முடியும். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கொந்தளிப்பையும், டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திமுக அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி அரசியலை விவரிக்கிறது மேற்கண்ட வீடியோ எக்ஸ்ப்ளைனர்.