தவெக ‘தாவல்’களை தடுக்குமா அதிமுக ‘முதியோர்’ கழகம்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரனின் விபரீத முடிவைச் சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்” என அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் போட்ட பதிவு, அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தனது பதிவில், அதிமுக இரண்டுபட்டு நிற்க காரணமானவர்களையும் சாடி இருந்த ராஜ் சத்யன், என்ன காரணத்தினாலோ சில மணி நேரத்திலேயே தனது பதிவை நீக்கிவிட்டார். இது குறித்து அவரை நாம் தொடர்பு கொண்டபோது, “கட்சி மீண்டும் செல்வாக்கான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அந்தப் பதிவை போட்டேன். மற்றபடி யார் மீதும் பழிசொல்வது நோக்கமில்லை” என்று முடித்துக் கொண்டார். இது விஷயமாக நம்மிடம் பேசிய ஐடி விங் பொறுப்பாளர்களோ சில தகவல்களைப் பகிர்ந்ததை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.