‘சுயநலம்’ சூழ் அதிமுக... எழுச்சியும் வீழ்ச்சியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

“ரத்​தத்​தின் ரத்​தமே” என்று எம்​ஜிஆர் சொன்​ன​போதெல்லாம், ஏதோ தாங்​களே கட்​சிக்கு ரத்​தம் கொடுத்ததைப் போன்று உணர்ந்​தார்​கள். இதனால் ஏகப்பட்ட நெருக்​கடிகளை​யும் எதிர்​கொண்​டார்​கள் எம்ஜிஆர் ரசிகர்​கள். மிக​வும் தீவிர​மாக இருந்த அவர்​களில் சிலரை ஜெயி​லில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்​பவங்​களும் நடந்​தன. இதனால், திமுக-​வும் அதி​முக-​வும் என்​றைக்​குமே சந்​திக்க முடி​யாத எதிரெ​திர் துரு​வங்​களாக மாறிப் போயின. அதி​முக-​வினரும் திமுகவினரும் பொது இடங்​களில் கைகுலுக்​கக் கூட தயங்கி​னார்​கள். இத்​தகையை நிலைப்​பாடுதான் அதிமுக-வை முதல் தேர்​தலிலேயே ஆட்​சிக் கட்​டிலிலும் அமர​வைத்​தது.

அதி​முக-வுக்கு ஜெயலலிதா தலை​மையேற்ற பிறகு இந்​தப் போக்கு இன்​னும் தீவிர​மானது. ‘தீய சக்​தி’ என்ற வார்த்தை பிரயோகத்தை ஜெயலலிதா சர்வ சாதா​ரண​மாய் உபயோகித்​தார். 2021 தேர்​தலில் தோற்​றாலும் அதி​முகவை வலு​வான எதிர்க்​கட்சி நிலைக்கு கொண்டு வந்த பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளில் கட்​சியை கட்​டுக்​கோப்பாகவே வழிநடத்​தி​னார். இவ்வாறாக அதிமுகவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

‘சுயநலம்’ சூழ் அதிமுக... எழுச்சியும் வீழ்ச்சியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
யார் இந்த வி.டி.சதீசன்? - கேரள முதல்வரின் உத்வேகப் பயணம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in