யார் இந்த வி.டி.சதீசன்? - கேரள முதல்வரின் உத்வேகப் பயணம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வி.டி.சதீசனின் பங்கு குறிப்பிடத்தக்கது என்ற போதிலும், அவருக்கு கட்சிக்குள் வலிமையான போட்டியாளர்கள் இருந்தனர். ரமேஷ் சென்னிதாலா இதில் மிக முக்கியமானவர். 28 வயதிலேயே கேரள அமைச்சரானவர் அவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் / வகிப்பவர். மற்றொரு முக்கிய போட்டியாளர் கே.சி.வேணுகோபால். எப்போதும், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் வலம்வரக்கூடிய அளவுக்கு மேலிட செல்வாக்கு மிக்கவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர். இவர்களுடன்தான் வி.டி.சதீசனுக்கு போட்டி இருந்தது.

எனினும், களத்தில் இருக்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலான செல்வாக்கு, முக்கிய கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஆதரவு, கட்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் ஆகியவை அவரது தேர்வை உறுதிப்படுத்தியது. கே.கருணாகரன், ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி ஆகியோரின் வரிசையில் கேரளாவின் காங்கிரஸ் முதல்வராக இப்போது பதவியேற்றிருக்கிறார் வி.டி.சதீசன். கேரள மாநில முதல்வராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசனின் வியத்தகு அரசியல் பயணத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

யார் இந்த வி.டி.சதீசன்? - கேரள முதல்வரின் உத்வேகப் பயணம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பொருளாதார நிலை... இந்திய மக்களுக்கு ‘நெருக்கடி’ எத்தகையது? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in