‘அதிமுக கூட்டணி ஆட்சி’ - புதிய கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது. 5 மாநிலங்களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனிடையே, ஐந்து மாநிலத் தேர்தல் தொடர்பாக ‘மேட்​ரிஸ்​ - ஐஏஎன்​எஸ்’ நடத்​திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் கவனம் ஈர்த்துள்ளது.

மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி தலைமையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி நான்காவது முறை​யாக ஆட்​சி​யைத் தக்கவைக்​கும் என்றும், தமிழகத்​தில் அதி​முக தலைமையிலான என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிக்​கும் என்றும் அந்தக் கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்​கத்​தில் மொத்​த​முள்ள 294 இடங்​களில், திரிணமூல் காங்​கிரஸ் 155-ல் இருந்து 170 தொகுதிகள் வரையிலும், பாஜக 100-ல் இருந்து 115 தொகுதிகள் வரையிலும் கைப்பற்​றும் என அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்ஜி மீண்​டும் முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் என்று கணிக்கப்பட்​டாலும், இம்​முறை திரிண​மூல் காங்கிரஸுக்​கும் பாஜக​வுக்​கும் இடையே கடுமை​யான போட்டி நில​வும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசி​யல் களம் குறித்து ‘மேட்​ரிஸ்​ - ஐஏஎன்​எஸ்’ வெளியிட்டுள்ள இந்தக் ​கருத்​துக் கணிப்பு தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்டணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்​சி​யைக் கைப்​பற்ற வாய்ப்புள்ள​தாக கணிக்கப்பட்​டுள்​ளது. தமிழகத்​தில் மொத்​த​முள்ள 234 இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணி 114-ல் இருந்து 127 தொகுதிகள் வரைலும், திமுக கூட்டணி 104-ல் இருந்து 114 இடங்கள் வரையிலும், விஜய்​யின் தமிழக வெற்றி கழகம் 6-ல் இருந்து 12 இடங்​கள் வரையிலும் கிடைக்​கும் என்று அந்தக் கருத்து கணிப்பு கூறி​யுள்​ளது.

அசாமில் பாஜக பெரும்​பான்​மை​யான இடங்​களை வென்று ஆட்சியை தக்கவைக்க வாய்ப்​புள்​ள​தாகவும், கேரளாவில் இடது முன்னணி, காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

‘அதிமுக கூட்டணி ஆட்சி’ - புதிய கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
Mindiyum Paranjum: லீனா அருளும் காதல் தரிசனம் | திரை தேவதைகள் 09

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in