Dhurandhar: திரைப் பார்வை - தேசபக்திக்கு அப்பால்..!

உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆதித்யா தர், அடுத்து கையில் எடுத்துள்ள ஓர் அதிரடியான ஆக்‌ஷன் களமே ‘துரந்தர்’. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது இப்படம். வெறுமனே தேசபக்தி என்ற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அதற்கேற்ற ஒரு நம்பகமாக கதையையும், புத்திசாலித்தனமான திரைக்கதையையும் எழுதி இந்த பிரம்மாண்ட வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார் ஆதித்யா தர். இப்படம் குறித்த முழுமையான பார்வையைச் சொல்லும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in