ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? - ஆரம்பம் ‘ரேஸ்’

அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று காமேனி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்கவில்லை. ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனி​தான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது தந்தை காமேனி​யிடம் அரசி​யல் கற்​றவர் என்று கூறப்படுகிறது.

எனினும் எதிர்தரப்​பைச் சேர்ந்த 2 பேர் ஈரானில் ஆட்​சி​யைப் பிடிக்க முயற்​சித்து வரு​கின்​றனர். முக்​கிய எதிர்க்​கட்​சித் தலை​வர் மர்​யம் ரஜாவி மற்​றும் அமெரிக்​கா​வில் தஞ்​சம் அடைந்​துள்ள ஈரானின் பட்​டத்து இளவரசர் ரெசாபஹ்லவி ஆகியோர் அதி​காரத்​தைக் கைப்​பற்ற நினைக்​கின்​றனர். அமெரிக்க தாக்​குதலில் காமேனி கொல்​லப்​பட்ட பிறகு, இவர்​கள் இரு​வரும் விடுத்த செய்தியில், “ஈரான் மக்​கள் ஒற்​றுமை​யாக இருக்க வேண்டும்” என்று கூறி​யுள்​ளனர். அத்​துடன் ஈரானில் இஸ்லாமிய குடியரசுக்​கான எதிர்​கால திட்​டங்​கள் குறித்து இரு​வரும் விளக்​க​மாக எடுத்​துரைத்​துள்​ளனர்.

மர்யம் ரஜாவி வெளி​யிட்ட செய்​தி​யில், “ஈரானிய மக்களே... மதகுரு ஆட்​சி​யைத் தூக்கி எறி​யுங்​கள். ஜனநாயகக் குடியரசு ஆட்​சியை ஏற்​படுத்​துங்​கள்” என்று அழைப்பு விடுத்​துள்​ளார். இதற்​கிடை​யில், ஈரான் கடைசி மன்​னரின் மகன் ரெசா பஹ்ல​வி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இஸ்லாமிய ஆட்சி சிதைந்​தால், அதற்கு மாற்​றான ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கு என்​னிடம் திட்​டங்​கள் உள்​ளன. அமெரிக்காவின் நடவடிக்கை ஈரான் மக்​களுக்கு எதிரானது அல்ல. அது மனி​தாபி​மான தலை​​யீடு” என்று கூறி​யுள்​ளார்.

இவர்​கள் தவிர ஈரானில் இஸ்​லாமிய புரட்​சிக்கு வழி​வகுத்த ருஹோல்லா கொமேனி​யின் பேரனான 53 ஹசன் கொமேனி​யும் ஆட்சி அதி​காரத்​தைக் கைப்​பற்ற நினைக்கிறார். ஆனால், காமேனி கொல்​லப்​பட்ட பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசி​யல் வலைதளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நல்ல தலை​வர் ஒருவர் ஈரானை வழிநடத்​து​வார். அவர் யார் என்​பது எனக்கு நன்கு தெரி​யும், ஆனால், அதை உங்​களுக்கு சொல்ல மாட்​டேன்” என்று கூறி​யுள்​ளார். ஆனால், யார் என்பது குறித்து அவர் எது​வும் கூற​வில்​லை.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? - ஆரம்பம் ‘ரேஸ்’
யார் இந்த அயத்துல்லா அலி காமேனி? - எழுச்சியும் வீழ்ச்சியும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in