மத்திய பட்ஜெட் 2026-ல் தமிழகத்துக்கான அறிவிப்புகள் என்னென்ன?

மக்களவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.

தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களில் அமைந்​துள்ள பொதிகை மலைப் பகு​தி​யில் சூழலியல் சமநிலை மாறாமல் மலை​யேற்ற வசதி​களை மேம்​படுத்த நிதி ஒதுக்கீடு செய்​யப்​படும். சென்னைக்கு அரு​கிலுள்ள புலிகாட் ஏரி என்று அழைக்​கப்​படும் பழவேற்​காடு ஏரி​யில் இயற்கை ஆர்​வலர்​களை ஈர்க்​கும் வகை​யில், பேர்ட் வாட்ச்சிங் என்று அழைக்​கப்​படும் பறவை​களைப் பார்த்து ரசிக்​கும் வசதி ஏற்​படுத்​தப்​படும். மொத்​தம் மூன்று புதிய பிரத்​யேகப் பார்வை மையங்​கள் அங்கு சுற்​றுலாப் பயணிகளுக்காக அமைக்​கப்​படும்.

தமிழர்​களின் தொன்​மை​யான வரலாற்​றைப் பறைசாற்றும் வித​மாக ஆதிச்சநல்லூரில் நவீன கலாச்​சார மையம் அமைக்கப்படவுள்ளது. அதே​போல் ஒடி​சா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்​களில் ஆமை​கள் முட்டை​யிட்டு தங்​களது குஞ்​சுகளைப் பாது​காக்க வசதி ஏற்படுத்தப்படும். அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், அசாம், மணிப்​பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்​களில் சுற்றுலா வளர்ச்சி மையங்கள் ஏற்​படுத்​தப்​படும்.

இந்த மாநிலங்​களில் சுற்​றுலாப் பயணி​களுக்​காக 4 ஆயிரம் மின்சார பேருந்​துகள் வாங்​கப்​படும். அதே​போல் அந்த மாநிலங்களில் மருத்​துவ சுற்​றுலா​வும் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்​டு​களில் அந்த மாநிலங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி செலவிடப்படும்.

தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, ஒடி​சா ஆகிய 4 மாநிலங்​களை இணைக்​கும் வகை​யில் பிரத்​யேக வழித்​தடங்​கள் அமைக்கப்பட உள்​ளன. கடற்​கரை ஓரங்​களில் அதிகப்படியான கனிம மணல் இருப்பு கொண்ட தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, ஒடிசா ஆகிய மாநிலங்​கள் இதன்மூலம் ஒருங்​கிணைக்​கப்​படும். தற்​போது அரிய வகை தாதுக்களுக்கு சீனா போன்ற நாடு​களை அதி​கம் நம்பியிருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், இறக்குமதியைக் குறைத்​து, உள்​நாட்​டிலேயே அரிய வகை தாதுக்களை பிரித்​தெடுத்​தல் மற்​றும் சுத்​தி​கரிப்பு ஆலைகளை அமைக்க இத்​திட்​டம் வகை செய்​யும்.

இந்த பிரம்​மாண்ட திட்​டத்​தின் மூலம் சுமார் 50 ஆயிரம் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும். இதில் தனி​யார் முதலீடு​களை ஈர்க்​கவும், அரிய வகை தாதுக்​களுக்​கான தனி இயக்​கத்தை உரு​வாக்​க​வும் பட்​ஜெட்​டில் நிதி ஒதுக்கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழித்​தடங்​கள் நாட்டின் சுய​சார்பு பொருளா​தா​ரத்​துக்கு புதிய உத்​வேகத்தை அளிக்​கும்.

இதற்​காக 7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்​கீடு செய்யப்பட்டுள்​ளது. இந்த வழித்​தடம் மூலம் தயாரிக்கப்படும் அரியவகை காந்​தங்​கள், கனிமங்​கள் ஆகியவை மின்​சார வாக​னங்​கள், விண்​வெளி ஆராய்ச்​சி, பாது​காப்பு உபகரணங்​கள், காற்​றாலை மின் உற்பத்திக்கு முதுகெலும்​பாக அமை​யும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 புதிய புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 2 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை - ஹைதராபாத் மற்றும் சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026-ல் தமிழகத்துக்கான அறிவிப்புகள் என்னென்ன?
மத்திய பட்ஜெட் 2026 சிறப்பு அம்சங்களும், விலை குறையும் + உயரும் பொருட்களும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in