மத்திய பட்ஜெட் 2026 சிறப்பு அம்சங்களும், விலை குறையும் + உயரும் பொருட்களும்!

மத்திய பட்ஜெட் 2026 சிறப்பு அம்சங்களும், விலை குறையும் + உயரும் பொருட்களும்!
Updated on
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

> தனி நபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை.

> புதிய வருமான வரி சட்டம், 2025, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எளிமையாக்கப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும்.

> உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் கொண்டுவரப்படுகிறது.

> எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு திட்டத்தின் மதிப்பு ரூ.40,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.

> எதிர்கால சாதனையாளர்களை உருவாக்க, ரூ.10,000 கோடியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதி அமைப்பு உருவாக்கப்படுகிறது.

> காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மகாத்மா காந்தி கிராம சுவராஜ் திட்டம் அறிமுகம்.

> தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க ‘தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்’ கொண்டுவரப்படுகிறது.

> முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியை 2030-ம் ஆண்டுக்குள் அதிகரிக்க பிரத்யேகத் திட்டம் கொண்டுவரப் படுகிறது.

> அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ‘கேலோ இந்தியா’ திட்டம் தொடங்கப்படும்.

> நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டில் 20 புதிய உள்நாட்டு நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இங்கு பயன்படுத்தும் கப்பலை பழுது பார்க்க வாராணசி, பாட்னாவில் மையங்கள் அமைக்கப்படும்.

> கடலோர சரக்கு போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்படும். உள்நாட்டு நீர்வழி மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்து 6 சதவீதத்திலிருந்து 2047-ம் ஆண்டுக்குள் 12 சதவீதமாக உயர்த்தப்படும்.

> நாடு முழுவதும் மாவட்டம்தோறும் ஒரு பெண்கள் விடுதி அமைக்கப்படுகிறது.

> புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 17 மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

> ஆழ்கடலில் இந்திய மீன்பிடிப் படகால் பிடிக்கப்படும் மீன்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்.

> இமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீரிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் நிலையான மலைப் பாதைகள் உருவாக்கப்படும்.

விலை குறையும் பொருட்கள்

> கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சுரங்கம், ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.

> உலகத் தரத்திலான கன்டெய்னர்கள் தயாரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.

> மனித வள திறனை மேம்படுத்த மண்டலப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

> கடல் விமானப் போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

விலை உயரும் பொருட்கள்

> ஆயுஷ் துறை மூலம் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

> தனியார் கால்நடை மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளை, பரிசோதனை மையங்கள், உற்பத்தி மையங்களுக்கு கடனுதவி மானிய திட்டம் தொடங்கப்படவுள்ளது.

> சரக்கு போக்குவரத்தை எளிதாக்க சுங்க நடைமுறைகள் எளிமையாக்கப்படுகின்றன.

> 2026-27ம் நிதியாண்டில் வரி வருவாய் ரூ.35,33,150 கோடி, மூலதன வருவாய் ரூ.18,14,165 கோடி, மொத்த வருவாய் ரூ.53,47,315 கோடி, மொத்த செலவினம் ரூ.53,47,315 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

> 2026-27ம் நிதியாண்டில் பொது மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது

மத்திய பட்ஜெட் 2026 சிறப்பு அம்சங்களும், விலை குறையும் + உயரும் பொருட்களும்!
Aattam: புறணி பேசும் ஆணுலகுக்கு அறைவிட்ட அஞ்சலி | திரை தேவதைகள் 03

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in