என் வழி... ‘தனி’ வழி... வைரல் பென்குவினும் உளவியல் பார்வையும்

பென்​கு​யின் என்​றதும் அன்​டார்​டிக்​கா​வின் பனிப்​ பிரதேசம்​தான் நினை​வுக்கு வரும். அந்த அன்​டார்​டிக்கா பிரதேசத்​தில் தன்​னுடைய கூட்டத்தை விட்டு தனியே சென்ற ஒற்றை பென்​கு​யின்​தான் இப்​போது இணை​யத்தில் நிரம்​பிக் கிடக்​கிறது. ஜெர்​மனியைச் சேர்ந்த திரைப்பட இயக்​குநர் வெர்​னர் ஹெர்​சாக் 2007-ம் ஆண்டு இயக்​கிய 'Encounters at the End of the World' ஆவணப்​படத்​தின் காட்​சி​தான் 2026-ம் ஆண்​டான தற்​போது இணை​யதளத்​தில் வைரலாகி வரு​கிறது.

அந்தக் காட்​சி​யில், ஒரு பென்​கு​யின் திடீரென தனது கூட்​டத்தை விட்டு வில​கி, சுமார் 70 கிலோ மீட்டர் தொலை​வில் உள்ள மலைத்​தொடரை நோக்கிச் செல்​கிறது. தன்னுடன் வந்த மற்ற பென்கு​யின்​கள் உணவு மற்​றும் உயிர் ​வாழ்​வதற்​காக கடலை நோக்கிச் செல்​லும் நிலை​யில், இந்த பென்​கு​யின் மட்​டும் தனி​யாக மலையை நோக்கிச் செல்​வது அந்தக் காணொலி​யில் தெரி​கிறது. அங்​கு, கடல் இல்​லை, உணவு இல்​லை. மலைகள், பனி, உறைபனி மட்​டுமே உள்​ளது. தனியே செல்​லும் பென்​கு​யின் காணொலி, ஒவ்​வொரு​வருட​னும் தொடர்​புடைய​தாக உணர வைக்​கிறது. இதனால்​தான், இந்த காணொலி இணை​யதளத்​தில் டிரெண்​டிங்​கில் உள்​ளது.

இந்த பென்​கு​யின் ஏன் தனியே செல்ல வேண்​டும், மற்றவர்களைப் போல தானும் சாதாரண வாழ்க்கை வாழாமல், புதிதாக ஏதோ ஒன்றை தேடிச் செல்​கிற​தா, மனச்​சோர்​வா, தனிமையை தேடிசெல்​கிறா, இறந்​து​விடு​வோம் எனத் தெரிந்​தும் அங்கு செல்​கிறதா என பலரும் கருத்துகளையும் கேள்வி​களை​யும் எழுப்புகின்​றனர். இது குறித்து விஞ்​ஞானிகள், வனவிலங்கு ஆர்​வலர்​கள் கூறுகை​யில், “இந்த பென்​கு​யின் நடத்தை அரிது என்​றாலும், நரம்​பியல் பிரச்சினை, இனப்​பெருக்க கால மன அழுத்​தம், குழப்​பத்​தால் இவ்​வாறு செய்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருக்​கின்​றன” எனத் தெரிவிக்​கின்​றனர்​.

எனினும், இந்த பென்குயின் ஏன் இப்படிச் செய்கிறது என்பது இதற்கு யாரிடமும் விடை இல்லை. இயக்குநர் ஹெர்சாக் தனது ஆவணப் படத்தில், ‘அந்த பென்குவினைத் தடுத்தாலும், அது மீண்டும் மலைகளை நோக்கியே செல்லும். இது ஒருவிதமான தற்கொலைப் பயணம் அல்லது அர்த்தமற்ற தேடல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோவுடன் தற்போது ‘நிஹிலிசம்’ என்ற வார்த்தையும் வைரலாகி வருகிறது. நிஹிலிசம் என்பது ‘வாழ்க்கைக்கு என்று எந்தவொரு அர்த்தமும் இல்லை, எந்தவொரு மதிப்பும் இல்லை’ என்று நம்பும் ஒரு தத்துவ நிலைப்பாடு.

சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் பென்குயினின் செயலைத் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இந்த வீடியோவின் பின்னணியில் சேர்க்கப்படும் சோகமான இசை, அந்தத் தனிமையின் வலியை மேலும் ஆழமாக உணர வைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆவணப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, 2026-ல் வாழும் மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

என் வழி... ‘தனி’ வழி... வைரல் பென்குவினும் உளவியல் பார்வையும்
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in