ஈரப்பத வெப்ப அலை... இந்தியர்களுக்கு அலர்ட் - ஆய்வு சொல்வது என்ன?

ஈரப்பத வெப்ப அலை​யால் இந்​தி​யர்​கள் பாதிக்கப்படுவதாக இங்​கிலாந்து பல்​கலைக்​கழக ஆய்வில் தெரிய​வந்​துள்​ளது. இது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

இங்​கிலாந்​தில் உள்ள ரெடிங் பல்​கலைக்​கழகத்​தில் (University of Reading) உள்ள அறி​விய​லா​ளர்​கள், இந்​தியா மற்றும் ஐக்​கிய ராஜ்ஜி​யத்​தின் (UK) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்​து, இந்​தி​யா​வின் பரு​வ​மழை காலத்​தில் வரும் “ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்​வாறு இயங்​கு​கின்றன என்பது குறித்து ஆய்வு மேற்​கொண்​டனர்.

அந்த ஆய்​வின் முடிவு​கள் தொடர்​பாக, கிளைமேட் டைனமிக்ஸ் (Climate Dynamics) என்ற ஆய்​விதழில், கோடை, பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வில் ஏற்படும் ஈரப்பதமான வெப்​ப அலைகளின் அமைப்பு என்ற தலைப்பில் ஆய்​வுக்​ கட்​டுரை ஒன்று அண்​மை​யில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களைப் பார்ப்போம்.

மனித உடல், வியர்​வையை வெளி​யேற்றி ஆவி​யாதல் மூலம் தன்​னைக் குளிர்விக்​கிறது. இது வறண்ட வெப்ப காலத்​தில் இயல்​பாக நடை​பெறுகிறது. ஆனால் பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வின் பெரும்​பகு​தி​யில் உள்​ளது​போல், காற்று ஏற்​கெனவே ஈரப்​ப​தத்​தால் நிறைந்திருக்கும்​போது, அந்த ஆவி​யாதல் மெது​வாக நடக்கிறது அல்​லது முழு​வது​மாக நடை​பெறாது.

இதன் காரண​மாக உடல் குளிர்​வித்​தல் நடை​பெறாமல் உடல் வெப்​பநிலை உயர்​கிறது. வெப்​பச் சோர்​வும், வாதமும் விரை​வாக ஏற்​படு​கிறது; இது நீடிக்​கும் பட்​சத்​தில் சில மணி நேரங்​களில் மரணம் ஏற்​படு​கிறது. அன்​றைய நாளில் பதி​வான வெப்​பநிலை இயல்​பான​தாகத் தெரியலாம். ஆனால் காற்​றில் அதிக ஈரப்​ப​தம் நிலவுகையில் நாம் உணரக்​கூடிய வெப்​ப நிலை அதி​க​மாகிறது.

சென்​னை​யில் கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் நடை​பெற்ற விமான சாகச கண்​காட்​சி​யின்​போது ஏற்​பட்ட 5 பேர் மரணம் மற்​றும் பலர் மயக்கமடைந்​ததற்கு காற்​றில் இருந்த அதிக ஈரப்​ப​தம் தான் காரணம். அன்​று, 32 டிகிரி செல்​சி​யல் வெப்​பநிலை நில​வியது. காற்​றில் இருந்த ஈரப்ப​தம் காரண​மாக அது 42 டிகிரி செல்​சி​யஸ் போன்ற பாதிப்பை ஏற்​படுத்​தி​யது.

ஈரப்பத வெப்ப அலை​யால் இந்​தி​யா​வில், விவ​சாய தொழிலா​ளர்​கள், நகர்ப்​புறங்​களில் கட்​டு​மான தொழிலாளர்​கள், கான்​கிரீட் வீடு​களில் வசிக்​கும் முதியோர் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

இந்த ஆய்​வானது, வெப்​பம் மற்​றும் ஈரப்​ப​தம் அடிப்படையி​லான வெப்ப அளவீட்டை பயன்​படுத்தி மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்த ஆய்​வின் மிக​வும் குறிப்​பிடத்​தக்க கண்​டு​பிடிப்பு என்​னவெனில், ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்பத்தை ஏற்​படுத்​து​வ​தில் மட்​டுமின்​றி, இந்​தி​யா​வில் அது எங்கே மிக​வும் ஆபத்​தாக இருக்​கும் மற்​றும் எப்​போது தாக்​கும் என்​ப​தைத் தீர்​மானிப்​ப​தி​லும் பரு​வ​மழை​யின் பங்கு உள்​ளது என்​பது​தான். இதை 4 வாரங்களுக்கு முன்பே கண்​டு​பிடித்து உரிய எச்​சரிக்​கையை வழங்க முடியும் என்று அந்த ஆய்​வறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரப்பத வெப்ப அலை...  இந்தியர்களுக்கு அலர்ட் - ஆய்வு சொல்வது என்ன?
‘மதுரை சித்திரைத் திருவிழா’ ஓர் ஆன்மிக கொண்டாட்டம் மட்டுமே அல்ல... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in