அமெரிக்காவின் ‘ஆயில்’ அரசியலும், டாலர் ‘ஆதிக்க’ உத்திகளும்!

வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்​குதல் நடத்​திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்​தது. இரு​வரும் அமெரிக்காவின் நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்டுள்​ளனர். போதைப்​ பொருள் கடத்தல், சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருத்தல் முதலான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்தாலும் கூட, வெனிசுலா மீதான நடவடிக்கைகளின் பின்னணியின் அமெரிக்காவின் எண்ணெய் - டாலர் ஆதிக்க அரசியலே மேலோங்கியிருப்பது தெளிவு.

உலகின் மொத்த எண்​ணெய் வளத்​தில் 18 சதவீதம் வெனிசுலா​வில் உள்​ளது. அதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 15 சதவீதம், ஈரானில் 12 சதவீதம், கனடாவில் 10 சதவீதம், ஈராக்​கில் 8.5 சதவீதம், குவைத்​தில் 6 சதவீதம், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் 5.8 சதவீதம், ரஷ்​யா​வில் 4.7 சதவீதம், லிபி​யா​வில் 2.9 சதவீதம், அமெரிக்​கா​வில் 2.6 சதவீதம் எண்​ணெய் வளம் இருக்​கிறது.

கச்சா எண்​ணெய் விற்​பனை தொடர்​பாக கடந்த 1970-ம் ஆண்​டில் சவுதி அரேபி​யா​வுடன் அமெரிக்கா முக்​கிய ஒப்​பந்​தத்தை மேற்கொண்​டது. இதன்​படி அமெரிக்க டாலரில் மட்​டுமே கச்சா எண்ணெய் வணி​கம் நடை​பெற வேண்​டும் என்று கட்​டுப்​பாடு விதிக்கப்பட்​டது. இதனால் உலகின் எண்​ணெய் வணி​கம் 100 சதவீதம் அளவுக்கு அமெரிக்க டாலரில் நடை​பெற்று வந்​தது.

உக்​ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடுகளும் பல்​வேறு பொருளா​தார தடைகளை விதித்​தன. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்​குமதி செய்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையிலான எண்​ணெய் வணி​கத்​தில் ரஷ்​யா​வின் ரூபிள், சீனாவின் யுவான் கரன்சி பரி​மாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கிறது.

உலக எண்​ணெய் வளத்​தில் முதலிடத்​தில் இருக்​கும் வெனிசுலாவுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே கடந்த 25 ஆண்டு​களுக்​கும் மேலாக மோதல் நீடிக்​கிறது. இதன் எதிர்விளைவாக வெனிசுலா​வின் எண்​ணெய் வணி​கத்​தில் சீனா ஆழமாக கால் பதித்து உள்​ளது.

வெனிசுலாவில் இருந்து சுமார் 70 முதல் 90 சதவீத கச்சா எண்​ணெயை சீனா இறக்​குமதி செய்து வந்தது. இரு நாடு​கள் இடையே யுவான் கரன்​சி​யில் எண்​ணெய் வணி​கம் நடை​பெற்​றது. இதன்​ காரண​மாக உலக கச்சா எண்​ணெய் வணி​கத்​தில் அமெரிக்க டாலரின் பங்கு 100-ல் இருந்து 80 சதவீத​மாக குறைந்து உள்​ளது.

ரஷ்யா​வின் ரூபிள், சீனா​வின் யுவான், இந்​திய ரூபா​யில் சுமார் 20 சதவீத எண்​ணெய் வணி​கம் நடை​பெற்று வரு​கிறது. இதே நிலை நீடித்​தால் எண்​ணெய் வணி​கத்​தில் அமெரிக்க டாலரின் ஆதிக்​கம் படிப்​படி​யாக குறைந்து, இதர நாடு​களின் கரன்​சிகள் கோலோச்ச தொடங்​கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையாகவும் வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதன்​மூலம் ஒரே கல்​லில் இரண்டு மாங்​காயை அமெரிக்கா அடித்​திருக்​கிறது.

வரும் காலத்​தில் வெனிசுலா​வின் ஒட்​டுமொத்த எண்​ணெய் வளமும் அமெரிக்காவின் வசமாகி டாலரின் ஆதிக்​கம் அதி​கரிக்​கும். அதோடு சீனா​வின் ஆதிக்கத்துக்கும் முற்​றுப்​புள்ளி வைக்கப்படும்.

இதனிடையே, எண்ணெய் அரசியலின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், “அடிப்​படை​யில் என்னை மகிழ்ச்​சிப்படுத்தவே இந்தியா விரும்புகிறது. இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி நல்ல மனிதர். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் நான் மகிழ்ச்​சி​யாக இல்லை என்​பது மோடிக்கு தெரி​யும்.

என்னை மகிழ்ச்​சிப்படுத்​து​வது மிக​வும் முக்​கி​யம். அமெரிக்கா​வுடன் இந்தியா வர்த்​தகம் செய்​கிறது. இந்தியா மீது மிக விரை​வாக வரிகளை உயர்த்த முடி​யும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முன்​ன​தாக அமெரிக்க செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் கூறும்போது, “ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​தியா மீது கூடு​தலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்​திருக்​கிறது.

ஒரு மாதத்​துக்கு முன்​பாக அமெரிக்கா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குவாத்​ராவை அவரது வீட்​டில் சந்​தித்​தேன். அப்​போது அமெரிக்காவின் கூடு​தல் வரி​வி​திப்பை வாபஸ் பெறு​மாறு இந்​திய தூதர் கோரிக்கை விடுத்​தார். இதற்கு ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்த வேண்​டும் என்று நான் வலி​யுறுத்​தினேன். அமெரிக்​கா​வின் அறி​வுரை​யால் ரஷ்​யா​விடம் இருந்து வாங்​கும் கச்சா எண்​ணெய் அளவை இந்​தியா குறைத்​திருக்​கிறது.

அமெரிக்​கா​வில் புதி​தாக ஒரு சட்​டத்தை இயற்ற திட்​ட​மிட்டு உள்​ளோம். இதன்​படி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழி​வகை செய்​யப்​படும்” என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் ‘ஆயில்’ அரசியலும், டாலர் ‘ஆதிக்க’ உத்திகளும்!
ஜனநாயகன் முதல் அரசன் வரை: கோலிவுட் 2026-ன் ‘மெகா’ லிஸ்ட்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in