ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை - காரணம் என்ன?

சென்​னை​யில் ஆபரணத் ​தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் அதிகரித்து, ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​பட்டு வரு​கிறது. 2025-ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ​ஒரு பவுன் 57,200 ரூபாய்க்கு விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில், தொடர்ந்து ஒவ்​வொரு மாத​மும் விலை அதி​கரித்து கொண்டே சென்​றது.

கடந்த அக்​டோபர் 17-ம் தேதி 97,600 ரூபாயாக ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதையடுத்து தீபாவளி​ முடிந்த பின்​னர் ஒரு பவுன் விலை 88,600 ரூபாயாக ஆகக் குறைந்​தது. பின்​னர் நவம்பர் 13-ம் தேதி 95,920 ரூபாயாக உயர்ந்​தது. அதைத்​தொடர்ந்து ஒரு மாத காலத்​துக்கு ஏற்ற இறக்​க​மாக இருந்த தங்​கத்தின் விலை கடந்த இரு வாரங்​களாக மீண்​டும் உயரத் தொடங்கி​யுள்​ளது.

இந்த நிலையில்தான், சென்​னை​யில் ஆபரணத்​ தங்​கம் விலை புதிய உச்​சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்​துள்​ளது. டிசம்பர் 12-ல் இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை 320 ரூபாய் உயர்ந்து 12,370 ரூபாயாகவும், ஒரு சவரன் விலை 2,560 ரூபாய் உயர்ந்து ரூ.98,960 ஆகவும் புதிய உச்சம் தொட்டது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 13,494 ரூபாயாகவும், சவரன் விலை 1,07,952 ரூபாயாகவும் விற்பனை ஆனது.

தங்​கத்​துக்​குப் போட்​டி​யாக வெள்​ளி​யின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. கடந்​த 5-ம் தேதி ஒரு கிராம் வெள்​ளி 196 ரூபாயகவும், ஒரு கிலோ வெள்​ளி 1 லட்சத்து 96 ஆயிரமாகவும் இருந்த நிலை​யில், படிப்​படி​யாக உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 210 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்​பனை செய்யப்படுகிறது.

ஏற்​கெனவே, தங்​கம் விலை 2025 இறு​திக்​குள் 1 லட்​சம் ரூபாயை கடக்​கும் என வர்த்தக வல்​லுநர்​கள் கணித்​துள்ள நிலை​யில், அது இன்னும் சில தினங்களில் நிஜமாகவும் சூழல் தெரிகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 ரூபாய் 55 பைசாவாக இருந்தது.

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் இப்படி வீழ்ச்சி கண்டுள்ளதுடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வர்த்தக நிபுணர்கள் ஏற்கெனவே கணித்ததன்படி, இந்த ஆண்டு முடிவதற்குள் - அதாவது 2025 டிசம்பருக்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டக் கூடும் எனத் தெரிகிறது.

ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை - காரணம் என்ன?
யார் இந்த ஈஷா சிங் ஐபிஎஸ்? - புதுச்சேரி காவல் அதிகாரியின் பின்புலம்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in